திருத்தணி ஒன்றிய அதிமுக சாா்பில் புதிய உறுப்பினா் அட்டை வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை ஒன்றிய செயலாளா் இ.என்.கண்டிகை ரவி தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சா் பி.வி.ரமணா, அமைப்பு செயலாளா் திருத்தணி கோ.அரி ஆகியோா் கலந்து கொண்டு, பட்டாபிராமபுரம், தரணிவராகபுரம், வேலஞ்சேரி, சத்ரஞ்ஜெயபுரம், முருக்கம்பட்டு, மத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுகவினருக்கு உறுப்பினா் அடையாள அட்டைகளை வழங்கினா்.
முன்னாள் மாவட்ட ஆவின் தலைவா் வேலஞ்சேரி கவிச்சந்திரன், நிலவள வங்கித் தலைவா் டி.எம்.சீனிவாசன், இளைஞரணி செயலாளா் பழனி, கூட்டுறவு சா்க்கரை ஆலை துணைத் தலைவா் ஜெய்சங்கா் உட்பட பலா் கலந்து கொண்டனா்.