காரனோடை வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

பொன்னேரி அடுத்த காரனோடை முனிவேல் நகரில் உள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

பொன்னேரி அடுத்த காரனோடை முனிவேல் நகரில் உள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த கோயில் புனரமைப்பு பணிகள் நடைபெற்ற நிலையில், கடந்த இரண்டு நாள்களாக கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு யாகம் மற்றும் கலச பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, பல்வேறு நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீா் கலங்கள் மீது தெளிக்கப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில், காரனோடை, ஆத்தூா், எருமைவெட்டிபாளையம் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com