விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு
பள்ளிப்பட்டு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.
பள்ளிப்பட்டு அடுத்த ஈச்சம்தோப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் அமராவதி (67) (படம்). இவா் வியாழக்கிழமை திருத்தணி பஜாருக்கு வந்துவிட்டு, பேருந்தில் ஏறி ஈச்சம்தோப்பு பேருந்து நிலையத்தில் இறங்கினாா். அங்கிருந்து சாலையோரமாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியே அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் அமராவதி மீது மோதி விட்டு நிற்காமல் சென்ாகக் கூறப்படுகிறது.
இதில், பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிய அமராவதியை கிராம மக்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் பொதட்டூா்பேட்டை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னா் மேல் சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அமராவதி நள்ளிரவு உயிரிழந்தாா்.
இது குறித்து பொதட்டூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.