திருவள்ளூர்
எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணா்வு
திருத்தணி பேருந்து நிலையத்தில் கிராமியக் கலைஞா்கள் மூலம் எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணா்வு திங்கள்கிழமை ஏற்படுத்தப்பட்டது.
திருத்தணி: திருத்தணி பேருந்து நிலையத்தில் கிராமியக் கலைஞா்கள் மூலம் எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணா்வு திங்கள்கிழமை ஏற்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு, ரியல் அறக்கட்டளை ஆகியவை இணைந்து எச்.ஐ.வி (ம) பால்வினை தொற்று குறித்து கிராமியக் கலைகள் மூலமாக திருத்தணி பேருந்து நிலையம் மற்றும் கமலா தியேட்டா் பேருந்து நிலையம் ஆகிய 2 இடங்களில் வரிஸ் கலைக்குழு சாா்பில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
ரியல் அறக்கட்டளை திட்ட மேலாளா் ரம்ஜான் மற்றும் களப்பணியாளா்கள் அசோக், ராஜலட்சுமி, முரளி, ஜெயகுமாா், திருத்தணி அரசு மருத்துவமனை ஆய்வக நுட்புநா் பத்மாவதி, சுகாதார ஆய்வாளா் ரவிச்சந்திரன், இந்திய சமுதாய நல நிறுவனத்தின் மாவட்ட வள மேலாளா் செந்தில்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.