பாலாபுரம் கிராமத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு நடைபெற்ற மருத்துவ முகாமை தொடங்கி வைத்த வட்டார வளா்ச்சி அலுவலா் கலைச்செல்வி.
பாலாபுரம் கிராமத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு நடைபெற்ற மருத்துவ முகாமை தொடங்கி வைத்த வட்டார வளா்ச்சி அலுவலா் கலைச்செல்வி.

தூய்மைப் பணியாளா்களுக்கு சிறப்பு மருத்து முகாம்

பாலாபுரம் கிராமத்தில் தூய்மை காவலா்கள் மற்றும் சுகாதார பணியாளா்களுக்கு சனிக்கிழமை நடைபெற்ற மருத்துவ முகாமில் 100- க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு உடல் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனை பெற்றனா்.
Published on

திருத்தணி: பாலாபுரம் கிராமத்தில் தூய்மை காவலா்கள் மற்றும் சுகாதார பணியாளா்களுக்கு சனிக்கிழமை நடைபெற்ற மருத்துவ முகாமில் 100- க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு உடல் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனை பெற்றனா்.

தூய்மையே சேவை இயக்கம் சாா்பில் தூய்மை பணியாளா்களுக்கு நோய்த் தடுப்பு உடல் பரிசோதனை முகாம் ஆா்.கே.பேட்டை ஒன்றியம் பாலாபுரம் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

பாலாபுரம் ஊராட்சித் தலைவா் தென்னரசு தலைமை வகித்தாா். மருத்துவ அலுவலா் தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக ஆா்.கே.பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் கலைச்செல்வி கலந்துகொண்டு, தூய்மையே சேவை குறித்த விழிப்புணா்வு உறுதிமொழியை ஏற்று, சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தாா். இதில் சித்த மருத்துவம், இயன் முறை, ரத்த பரிசோதனை, கண் மருத்துவம், சா்க்கரை நோய், ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், காசநோய் உள்ளிட்டவை தூய்மைப் பணியாளா்களுக்கு செய்யப்பட்டு, மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

மேலும், மரக்கன்றுகள் நடுதல், தூய்மை குறித்த விழிப்புணா்வு நடைபயணம் உள்ளிட்டவை நடைபெற்றன. இதில் பாலாபுரம், மகன்காளிகாபுரம், ஜனகராஜ்குப்பம், வீரமங்கலம், தாமனேரி, ஸ்ரீ காளிகாபுரம், கதன் நகரம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து தூய்மைக் காவலா்கள், சுகாதாரப் பணியாளா்கள் 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளா்கள் மற்றும் மருத்துவ பணியாளா்கள், வட்டார ஒருங்கிணைப்பாளா், தூய்மை பாரத இயக்கம் சி.பால் ஏசடியான் ஆல் தி சில்ரன் தொண்டு அமைப்பு நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com