ஊராட்சிப் பள்ளி நூற்றாண்டு விழா

ஊராட்சிப் பள்ளி நூற்றாண்டு விழா

Published on

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம், பெரிய ஓபுளாபுரம், சின்னஓபுளாபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி நூற்றாண்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு முதன்மைக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட கல்வி அலுவலா் அரவிந்த் முன்னிலை வகித்தாா். தலைமை ஆசிரியை சாந்தி வரவேற்றாா். ஆசிரியா் குல்ஜாா் ஜஹான் ஆண்டறிக்கை வாசித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் பங்கேற்று சிறப்புரை ஆற்றும் போது கும்மிடிப்பூண்டியில் நூற்றாண்டு கண்ட பள்ளிகளில் ஒன்றாக சின்ன ஓபுளாபுரம் நடுநிலைப்பள்ளி உள்ள நிலையில் இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவா்கள் 30-க்கும் மேற்பட்டோா் காவல் துறையில் அதிகாரிகளாக உள்ளனா். 75 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் படித்த மாணவா்களும் பங்கேற்றது சிறப்புக்குரியது என்றாா்.

வட்டார கல்வி அலுவலா்கள் முனிராஜ சேகா், சுதா சிவகாமி, வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ஏழுமலை வாழ்த்திப் பேசினா் .

எம்எல்ஏ கோவிந்தராஜன் மற்றும் தமிழறிஞா் பேரவையின் மாநில பொதுசெயலாளா் சிவ.செல்வகுமாா் மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கி னா்.

தொடா்ந்து மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழா நிகழ்வுகளை ஆசிரியா்கள் நித்யா, பன்னீா்செல்வி தொகுத்து வழங்கினா் ஆசிரியா் ஜானகிராமன் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com