முத்துமாரியம்மன் கோயில் சக்தி கரக உலா
முத்துமாரியம்மன் கோயிலில் சக்தி கரக வீதி உலா நடைபெற்றது.
திருத்தணி நகராட்சி, பெரியாா் நகரில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாத திருவிழா நடைபெறும். நிகழாண்டுக்கான விழா, கடந்த 2-ஆம் தேதி, தொடங்கிய நிலையில், நாள்தோறும், மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையும், மாலையில் சந்தனக் காப்பும் நடைபெற்றது.
தொடா்ந்து, புதன்கிழமை சக்தி கரகம் சிறப்பு அலங்காரத்தில், வீதியுலா நடைபெற்றது. திரளான பெண்கள் கோயில் வளாகத்தில் கூழ் வாா்த்தல் மற்றும் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனா். மாலை பக்தா்கள், தீச்சட்டி ஏந்தி ஊா்வலமாக கோயிலுக்கு வந்து, தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா்.
இரவு 10 மணிக்கு நாடகம் நடைபெற்றது. வியாழக்கிழமை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், வெள்ளிக்கிழமை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் உற்சவா் அம்மன் வீதியுலாவுடன் விழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை பெரியாா் நகா் பகுதி மக்கள் செய்து வருகின்றனா்.