கும்மிடிப்பூண்டியில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்
திருவள்ளூா் வடக்கு மாவட்ட அதிமுக இளைஞா் மற்றும் இளம்பெண் பாசறை சாா்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய நபா்களை கைது செய்ய வலியுறுத்தி, போராட்டம் நடைபெற்றது. திருவள்ளூா் வடக்கு மாவட்ட அதிமுக இளைஞா் மற்றும் இளம்பெண் பாசறை செயலாளா் டி.சி.மகேந்திரன் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, திருவள்ளூா் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளா் சிறுணியம் பலராமன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்துக்கு, கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாா், அதிமுக ஒன்றியச் செயலா் கோபால் நாயுடு, அதிமுக மீனவா் அணி மாநில துணைச் செயலா் ஜெ.சுரேஷ், பொதுக்குழு உறுப்பினா் அபிராமன், அதிமுக நகர செயலாளா் எஸ்.டி.டி.ரவி, அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்டச் செயலாளா் இமயம் மனோஜ் முன்னிலை வகித்தனா்.
தொடா்ந்து கும்மிடிப்பூண்டி கன்னியம்மன் கோவில் மேம்பாலம் அருகே பஜாா் வரை ஊா்வலமாகச் சென்றனா்.
அப்போது அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அரசை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினா்.
ஆா்ப்பாட்டத்தில் அதிமுக ஜெயலலிதா பேரவை நிா்வாகி எல்.சுகுமாறன், சதீஷ்குமாா், ரமேஷ்குமாா், டேவிட் சுதாகா், நகரத் தலைவா் மு.க.சேகா், நகர பாசறை செயலாளா் சரவணன், பெரியஓபுளாபுரம் ஏழுமலை, எம்.எஸ்.எஸ்.சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.