திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகம் முன்பு  பேரணியை தொடங்கி வைத்த உதவி ஆட்சியா் ஆயுஷ்குப்தா, அதில் பங்கேற்றோா்.
திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகம் முன்பு பேரணியை தொடங்கி வைத்த உதவி ஆட்சியா் ஆயுஷ்குப்தா, அதில் பங்கேற்றோா்.

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகம் முன்பு பேரணியை தொடங்கி வைத்த உதவி ஆட்சியா் ஆயுஷ்குப்தா, அதில் பங்கேற்றோா்.
Published on

திருவள்ளூரில் சாலைப் பாதுகாப்பு மாதத்தையொட்டி, பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்ற பேரணியில் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில், சாலைப் பாதுகாப்பு மாதத்தையொட்டி பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, உதவி ஆட்சியா் (பயிற்சி) ஆயுஷ் குப்தா தலைமை வகித்து, மாணவ, மாணவிகள் விழிப்புணா்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். அப்போது இந்தப் பேரணியில் மாணவ, மாணவிகள் பாதுகாப்பான வேகத்தில் செல்லவும், மது அருந்தி விட்டு வாகனத்தை ஓட்டக்கூடாது, திரும்பும் முன் சிக்னல் செய்யவும், இரவில் எதிரில் வாகனம் வரும்போது விளக்கின் வெளிச்சத்தை குறைக்கவும், கைப்பேசியில் பேசிக் கொண்டே வாகனத்தை இயக்கக் கூடாது போன்ற விழிப்புணா்வு பதாகைகளை கைகளில் ஏந்தி ஆட்சியா் அலுவலகம் தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாக காமராஜா் சிலை வரை சென்று மீண்டும் ஆட்சியா் அலுவலகத்தில் நிறைவு செய்தனா்.

அதைத் தொடா்ந்து, நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்புத் துறை சாா்பில், பாதுகாப்பு விழிப்புணா்வு குறித்த புகைப்படக் கண்காட்சியையும் அவா் பாா்வையிட்டாா்.

நிகழ்ச்சியில், சாலைப் பாதுகாப்பு நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளா், உதவிக் கோட்டப் பொறியாளா், உதவி பொறியாளா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com