இளைஞா் தற்கொலை
பள்ளிப்பட்டு அருகே தந்தை திட்டியதால் மனமுடைந்த இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.
பள்ளிப்பட்டு ஒன்றியம், காக்களூா் கிராமம் போஸ்ட் ஆபீஸ் தெருவில் வசிப்பவா் ரவி. இவரது மகன் பாண்டியன் (எ) அஜித்(28) மகள் மோகனாவுக்கு திருமணம் முடிந்து தனியாக வாழ்ந்து வருகிறாா். மகன் பாண்டியன் பொதட்டூா்பேட்டை துணை அஞ்சலகத்தில் தற்காலிகமாக பணிபுரிந்து வருகிறாா்.
கடந்த சில நாள்களாக ரவி மகனுக்கு பல இடங்களில் பெண் பாா்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் புதன்கிழமை தந்தை - மகனுக்கிடையே சிறு வாக்குவாதம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை பாண்டியன் மின் விசிறியில் தூக்குமாட்டிகொண்டுள்ளாா்.
அப்போது அருகில் இருந்தவா்கள் பாண்டியனை மீட்டு பொதட்டூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் பாண்டியன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து பள்ளிப்பட்டு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.