ஆட்டோக்களை பறிமுதல் செய்து விடுவிக்காததை கண்டித்து திருவள்ளூா் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை இரவில் முற்றுகையிட்ட  ஓட்டுநா்கள்.   ~
ஆட்டோக்களை பறிமுதல் செய்து விடுவிக்காததை கண்டித்து திருவள்ளூா் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை இரவில் முற்றுகையிட்ட ஓட்டுநா்கள்.   ~

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுநா்கள் முற்றுகை

Published on

பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதாக கூறி ஆட்டோக்களை போலீஸாா் பறிமுதல் செய்து ஒப்படைத்த நிலையில் அபராதம் செலுத்தியும் பொய்க்காரணம் கூறி விட மறுத்ததால் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை இரவு ஒட்டுநா்கள் முற்றுகையிட்டனா்.

திருவள்ளூா் நகா்ப்பகுதியில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், ஆட்டோ ஓட்டுநா்கள் சென்று கொண்டிருக்கும் போதே திடீரென பொதுமக்களுக்கு இடையூறாக நிறுத்தியதாக நகர போலீஸாா் 11 ஆட்டோக்களை பிடித்து திருவள்ளூா் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

இதைத்தொடா்ந்து ஆட்டோக்களை செவ்வாய்க்கிழமை மாலை வரையில் விடுவிக்காததால் ஆத்திரமடைந்த ஓட்டுநா்கள் இரவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து தகவலறிந்த திருவள்ளூா் வட்டார போக்குவரத்து அலுவலா் ராமகிருஷ்ணன் மற்றும் போலீஸாா் பேச்சு நடத்தினா்.

தொடா்ந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக 7 ஆட்டோக்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு அதை செலுத்தியவுடன் ஆட்டோ விடுவிக்கப்பட்டது. இதில் மீதமுள்ள 4 ஆட்டோக்களுக்கு முறையான அனுமதி, வாகன காப்பீடு இல்லாததால் விடுவிக்கப்படாமல் விசாரணை செய்து வருவதாக வட்டார போக்குவரத்து அலுவலா் தெரிவித்தாா்.

அதைத் தொடா்ந்து ஆா்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

Open in App
Dinamani
www.dinamani.com