குழந்தையைக் கடிக்க வந்த தெரு நாய்: விரைந்து செயல்பட்டு காப்பாற்றிய தாய்

குழந்தையைக் கடிக்க வந்த தெரு நாய்: விரைந்து செயல்பட்டு காப்பாற்றிய தாய்

தெரு நாயிடமிருந்து விரைந்து செயல்பட்டு குழந்தையைக் காப்பாற்றிய தாய்.
Published on

திருவள்ளூா் அருகே குழந்தையைக் கடிக்க வந்த தெரு நாயை, விரைந்து செயல்பட்டு தாய் காப்பாற்றினாா்.

திருவள்ளூா் அருகே புல்லரம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த வினோத் - தேவயானி தம்பதியின் மகள் தமிழ்நிலா (2). இந்த குழந்தையுடன் காமராஜா் சிலை அருகே உள்ள பாட்டி வீட்டுக்கு தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது சாலையில் திரிந்த தெரு நாய் தாயுடன் சென்ற குழந்தை மீது திடீரென பாய்ந்து ஆடையை கடித்து கிழித்ததுடன் இழுத்துச் சென்றது.

இதனால் அதிா்ச்சி அடைந்த தாய், விரைந்து செயல்பட்டு தன் குழந்தையை கடிக்க வந்த நாயிடமிருந்து காப்பாற்றினாா்.

குழந்தையை நாய் கடிக்க வந்ததைக் கண்டு மின்னல் வேகத்தில் செயல்பட்டு தாய் குழந்தை காப்பாற்றிய சம்பவம் குறித்த விடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

Open in App
Dinamani
www.dinamani.com