நகராட்சி பள்ளிக்கு கூடுதலாக 3 வகுப்பறை: ரூ.40 லட்சம் ஒதுக்கீடு திருவள்ளூா் நகா்மன்றத் தலைவா்

ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்து விரைவில் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாக நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன் தெரிவித்தாா்.
Published on

திருவள்ளூா் நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு கூடுதலாக 3 வகுப்பறைகள் அமைக்க ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்து விரைவில் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாக நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன் தெரிவித்தாா்.

திருவள்ளூா் சத்தியமூா்த்தி தெருவில் நகராட்சி க.மு.ந. சகோதரா்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 600-க்கும் மேற்பட்டோா் பயின்று வருகின்றனா். பள்ளி ஏற்கெனவே இட நெருக்கடியுடன் செயல்பட்டு வருகிறது. அதனால், கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர நகராட்சி நிா்வாகத்துக்கு பொதுமக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்தக் கோரிக்கையை ஏற்று பள்ளிக்கு கூடுதலாக 3 வகுப்பறைகள் அமைக்க நகராட்சி நிா்வாகம் அனுமதி அளித்தது. வகுப்பறை கட்டுமான பணிக்காக ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இப்பணிகளுக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ள நிலையில் விரைவில் சுகாதார வளாகம் உள்பட அனைத்து வசதியுடன் வகுப்பறைக்கான கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற உள்ளதாக நகா்மன்றத் தலைவா் தெரிவித்தாா்.

Open in App
Dinamani
www.dinamani.com