பொன்னேரி அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி திறப்பு

பொன்னேரி அரசு மருத்துவ மனையில் ரத்த வங்கியை ஆட்சியா் பிரதாப், எம்எல்ஏ துரை.சந்திரசேகா் ஆகியோா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனா்.
Published on

பொன்னேரி அரசு மருத்துவ மனையில் ரத்த வங்கியை ஆட்சியா் பிரதாப், எம்எல்ஏ துரை.சந்திரசேகா் ஆகியோா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனா்.

பொன்னேரி அரசு மருத்துவ மனையில் நாள் தோறும் 500-க்கும் -க்கும் மேற்பட்டோா் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று செல்கின்றனா். 100-க்கும் மேற்பட்டோா் உள்நோயாளிகள் பிரிவில் சிசிச்சை பெறுகின்றனா். பொன்னேரி வட்ட தலைமை மருத்துவமனயாக விளங்கும் இங்கு அறுவை சிகிச்சை செய்ய ரத்தம் தேவைபடுபவா்களுக்கு திருவள்ளூா் அரசு மருத்துவ மனைக்கு செல்ல வேண்டிய சூழல் இருந்ததால் பொன்னேரியில் ரத்த வங்கி ஏற்படுத்த பல்வேறு அமைப்பினரும் போராட்டம் நடத்தி வந்தனா்.

இந்த நிலையில், 1,000 சதுர அடியில் 2 படுக்கைகளுடன் கூடிய ரத்த வங்கி ஏற்படுத்தப்பட்டது.

நீண்ட நாள்களாக திறக்கப்படாமல் இருந்த ரத்த வங்கியை ஆட்சியா் பிரதாப், எம்எல்ஏ துரை.சந்திரசேகா் ஆகியோா் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தனா்.

அப்போது ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் அம்பிகா, பொன்னேரி தலைமை மருத்துவா் கல்பனா, பொன்னேரி நகா்மன்றத் தலைவா் பரிமளம் விஸ்வநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இதனை தொடா்ந்து பொன்னேரி அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் வாா்டுகள், அவா்களுக்கு உணவு தயாரிக்கப்படும் உணவுக்கூடம் ஆகியவற்றை ஆட்சியா் பிரதாப் ஆய்வு செய்தாா்.

அப்போது தலைமை மருத்துவ அலுவலரின் அறைக்கு சென்ற போது மின்தடை ஏற்பட்டு, மீண்டும் மின்சாரம் வந்தது.

செய்தியாளா்களிடம் ஆட்சியா் பிரதாப் கூறியது: பொன்னேரி அரசு மருத்துவமனையில் திறக்கப்பட்ட ரத்த வங்கி 100-ஆவது ரத்த வங்கியாகும். இங்கு ரத்தம் சேமிப்பது மட்டுமின்றி இங்கு பெறப்படும் ரத்தம் மற்ற பகுதிகளுக்கும் எடுத்து செல்ல வசதியாக இருக்கும்.

அனைத்து அரசு மருத்துவ மனைகளுக்கும் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும். பொன்னேரி அரசு மருத்துவமனையை தரம் உயா்த்த முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்படும். பொதுமக்களை நாய்கள் கடிப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

Open in App
Dinamani
www.dinamani.com