வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழப்பு

வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழப்பு

Published on

திருவாலங்காடு அருகே வாகனம் மோதியதில் புள்ளிமான் உயிரிழந்தது (படம்).

திருவாலங்காடு ஒன்றியம் வியாசபுரம் கிராம மாநில நெடுஞ்சாலை அருகில் காப்பு காடுகளும், விவசாய நிலங்களும் உள்ளன. இதில் புள்ளி மான்கள், முயல், மயில் போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நீா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் நீா் தேடியும் உணவு தேடியும் மான், மயில், முயல் போன்ற வன விலங்குகள் ஊருக்குள் வருகிறது.

இந்நிலையில் தண்ணீரை தேடி வியாசபுரம் சாலையை கடக்க முயன்ற புள்ளிமான் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் புள்ளிமான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. அங்கு வந்த காவல் துறையினா் மற்றும் திருத்தணி வனத்துறையினா் மானின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா். திருவாலங்காடு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com