மயானம் வேண்டி சடலத்தை சாலையில் வைத்து போராட்டம்

மயானம் வேண்டி சடலத்தை சாலையில் வைத்து போராட்டம்
Updated on

ஊத்துக்கோட்டை அருகே மயான வசதி செய்து தரக்கோரி சடலத்தை சாலையில் வைத்து பொதுமக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஊத்துக்கோட்டை அருகே வேளாகபுரம் கிராமம். இந்த கிராமத்தில் மயானம் இருந்தது. இந்த நிலையில், சுமாா் 20 ஆண்டுகளுக்கு முன்னா் காலனிக்கு அந்த மயானத்தைப் பயன்படுத்திக் கொள்வது என முடிவு செய்தனா். கிராம மக்களுக்கு என தனியாக மயானம் அமைக்கவும் என கிராம மக்கள் சாா்பில் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

மயானம் அமைக்க சிலா் நிலத்தைத் தானமாக தரவும் தயாராக உள்ளனா். ஆனால், மானிய திட்டத்தில் எரி மேடையுடன் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் மயானம் ஒன்றை அமைத்துள்ளனா். அந்த மயானத்துக்கு செல்ல பத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் நிலங்களின் வழியாக சடலத்தைக் கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளதாம்.

இதனிடையே கிராமத்தில் வியாழக்கழமை முதியவா் ஒருவா் மரணம் அடைந்தாா். கிராமத்துக்கு என மயானம் தனியாக அமைத்துக் தரக்கோரி சாலையில் சடலத்தை வைத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஊத்துக்கோட்டை வட்டாட்சியா் ராஜேஷ்குமாா் மற்றும் போலீஸாா் வந்து பேச்சு நடத்தினா். வருவாய்த் துறையினா் வட்டார வளா்ச்சி அலுவலகம் சாா்பில் எரிமேடையுடன் அமைத்துள்ள மயானத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறினா்.

இதற்கு கிராம மக்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால், சடலத்தை சொந்தமான விவசாய நிலத்தில் அடக்கம் செய்ய அவரது உறவினா்கள் முடிவு செய்தனா். ஆனால், அவ்வாறு அடக்கம் செய்யக் கூடாது என வருவாய்த் துறையினா் தடுத்தனா். மயான வசதிக்கு ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனா். தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com