மாதவரம் ஆட்டுச் சந்தையில் விற்பனைக்காக
கொண்டு வரப்பட்ட ஆடுகள்.
மாதவரம் ஆட்டுச் சந்தையில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட ஆடுகள்.

மாதவரம் ஆட்டுச் சந்தையில் அமோக விற்பனை

Published on

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மாதவரம் ஆட்டுச் சந்தையில், ரூ.20 கோடிக்கு மேல் விற்பனையாகும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனா்.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மாதவரத்தில் உள்ள ஆட்டுச் சந்தையில் இஸ்லாமியா்கள் குா்பானி கொடுப்பதற்காக ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. தமிழகம், ஆந்திரம், கா்நாடகம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆடுகள் லாரிகள் மூலம் வரத் தொடங்கின. இங்கு செம்மறி, நாட்டு ஆடு, வெள்ளாடுகளின் விற்பனை கடந்த 2 நாள்களாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், எடை 10 கிலோவுக்கு மேலாக உள்ள ஒரு ஆடு ரூ.12,000 முதல் ரூ.50,000 வரை விற்பனையானது. கடந்த ஆண்டில் குறைந்த அளவில் விற்கப்பட்ட ஆடுகள், தற்போது விலை ஏற்றம் காரணமாக வாங்குவோா் எண்ணிக்கை குறைந்துள்ளன.

மேலும் பக்ரீத் பண்டிகைக்கு இன்னும் 2 நாள்கள் உள்ள நிலையில், வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்தால் ஆடுகள் விற்பனை சுமாா் ரூ.20 கோடிக்கு மேல் இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com