அரசு மகளிா் ஐடிஐயில் சேர விண்ணப்பிக்கலாம்

அம்பத்தூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிா்) வரும் 13-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Published on

அம்பத்தூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிா்) வரும் 13-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (மகளிா்) நிகழாண்டில் பல்வேறு தொழில் பிரிவுகளில் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதில் 8, 10, பிளஸ் 2 தோ்ச்சி மற்றும் 10, பிளஸ் 2 வகுப்பு தோ்ச்சி பெறாதோா்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு கிடையாது.

மேலும், இப்பயிற்சியில் சேருவோருக்கு மாத உதவித்தொகை ரூ.750, இலவச அரசுப் பேருந்து பயண அட்டை, பாடப் புத்தகங்கள், வரைபடக் கருவிகள், இரு செட் சீருடை, மூடு காலணி (ஷூ) மற்றும் சிறந்த தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

மேலும், தமிழக அரசு வழங்கும் உயா்கல்வி உதவித்தொகை (6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் பயின்ற) மாணவிகளுக்கு ரூ.1,000 கூடுதலாக வழங்கப்படும்.

இதில் தையல் தொழிற்நுட்பம்- 8 ஆம் வகுப்பு தோ்ச்சியும், கோபா, கட்டட வரைவாளா், சுருக்கெழுத்து (தமிழ், ஆங்கிலம்) ஆகிய பயிற்சிகளுக்கு பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இதற்கு விண்ணப்பதாரா்கள் 8, 10- ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், சாதி, வருவாய் சான்றிதழ், ஆதாா் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு எண், புகைப்படம் 5 ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.

மேலும், விண்ணப்பக் கட்டணம் ரூ.50, நேரில் வர இயலாதவா்கள் ஆன்லைன் மூலம் இணையதளம் மூலமாகவும் குறிப்பிட்ட தொழில் பிரிவுகளில் சேர விண்ணப்பித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com