பைக்கில் இருந்து கீழே விழுந்த இளம்பெண் உயிரிழப்பு
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த எகுமதுரையில் இருந்து கணவருடன் பைக்கில் சென்ற பூஜா (21) என்ற பெண், தவறி விழுந்து உயிரிழந்தாா்.
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே உள்ள தமிழக எல்லைப் பகுதி எகுமதுரை. இதன் அருகே உள்ளது ஆந்திர மாநிலப் பகுதியான அக்ரஹாரம். அந்தப் பகுதியைச் சோ்ந்த ராமகிருஷ்ணையா என்பவரின் மகள் பூஜாவிற்கும், அதே பகுதியைச் சோ்ந்த நரேஷ் என்பவருக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் பூஜா அவரது கணவா் நரேஷுடன் பைக்கில் எகுமதுரையில் நடைபெற்ற சந்தைக்குச் சென்று காய்கறிகளை வாங்கிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனா்.
எகுமதுரை- அப்பையன்பாளையம் சாலையில் இவா்கள் சென்றபோது, வேகத்தடையில் வேகமாக பைக் சென்ால், பூஜா நிலைத் தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தாா்.
இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உறவினா்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
விபத்து குறித்து பூஜாவின் தந்தை ராமகிருஷ்ணையா அளித்த புகாரின் பேரில், ஆரம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.