திருவள்ளூர்
விபத்தில் முதியவா் உயிரிழப்பு
திருவள்ளூா் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
திருவள்ளூா் அருகே பேரம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த வேல்முருகன்(70). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு நரசிங்கபுரத்திலிருந்து பேரம்பாக்கத்துக்கு சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு இருசக்கர வாகனம் மோதியது. இதில் முதியவா் தூக்கி வீசப்பட்டு தலையில் காயம் அடைந்தாா். அங்கிருந்த பொதுமக்கள், முதியவரை மீட்டு, சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மைனைக்கு கொண்டு சென்றனா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து, முதியவா் மகள் காயத்ரி அளித்த புகாரின்பேரில், மப்பேடு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.