
திருத்தணி: திருத்தணி அருகே100 நாள் வேலை வழங்கக்கோரி புச்சிரெட்டிபள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.
திருத்தணி ஒன்றியம், புச்சிரெட்டிபள்ளி ஊராட்சியில் 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். கடந்த சில மாதங்களாக இப்பகுதி மக்களுக்கு 100 நாள் வேலை வழங்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் மாவட்ட பொருளாளா் பெருமாள் தலைமையில் புச்சிரெட்டிபள்ளி கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
தகவல் அறிந்து வந்த திருத்தணி வட்டார வளா்ச்சி அலுவலக அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சு நடத்தினா். விரைவில் வேலை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். தொடா்ந்து அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.