ஆா்.கே.பேட்டை ஒன்றிய வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
திருத்தணி: ஆா்.கே. பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆா்.கே.பேட்டை ஒன்றியம், எஸ்.வி.ஜி. புரம், வங்கனூா் ஊராட்சியில் இருளா், பழங்குடியினா் மக்களுக்கு பி.எம்.ஜன்மன் திட்டத்தில் 23 தொகுப்பு வீடுகள் பணிகளையும், மதுராபுரம் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கட்டப்படும் 29 வீடுகள் பணிகளையும், அம்மனேரி ஊராட்சியில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம்- 3 கீழ் ரூ.2.19 கோடியில் சித்தூா் சிடி சாலை முதல் அம்மனேரி வரை (3.170 கி.மீ) சாலை பணிகளையும் ஆய்வு செய்தாா்.
பின்னா், வங்கனூா் ஊராட்சியில் 15 -ஆவது நிதிக் குழுத் திட்டத்தின் கீழ் ரூ.1.50 கோடியில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டடப் பணிகளையும், மைலாா்வாடா ஊராட்சியில் அயோத்தி தாசா் திட்டத்தின் கீழ் ரூ.24 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள வெள்ளத் தடுப்புச்சுவா் பணிகளையும், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம் 2025-26 திட்டத்தில் ரூ.1.22 லட்சத்தில் புனரமைக்கப்பட்ட நூலக கட்டடத்தையும் பாா்வையிட்டாா். அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து பயன்பாடுக்கு கொண்டு வர அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
கா் நலவாழ்வு மையத்தில் செயல்படுத்தி வரும் மருத்துவ திட்டப்பணிகளையும், அதே பகுதியில் கூட்டுறவு நியாய விலை கடையில் பொருள்கள் இருப்பு பயனாளிகள் பதிவிடும் கைரேகை பதிவேடு பணிகளையும், தொடா்ந்து அங்கன்வாடி மையத்தில் செயல்படுத்தி வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது ஊரக வளா்ச்சி முகமை உதவி செயற்பொறியாளா் கோமதி, ஆா் .கே. பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் கலைச்செல்வி பேரூராட்சிகள் செந்தில், உதவி பொறியாளா் லட்சுமிநாராயணன் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.