செல்வ கணபதி கோயில் பூட்டை உடைத்து செப்பு கலசம், காணிக்கை திருட்டு
திருவள்ளூா் அருகே செல்வ கணபதி கோயில் பூட்டை உடைத்து செப்பு கலசங்கள், பித்தளை பூஜை பொருள்கள் மற்றும் உண்டியல் காணிக்கை ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
திருவள்ளூா் அடுத்த காக்களூா் நியுமாருதி நகரில் செல்வகணபதி கோயில் உள்ளது. இங்கு செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் பூஜை முடிந்து இரவு 9 மணிக்கு பூட்டிவிட்டு சென்றுள்ளனா். இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை அா்ச்சகா் பூஜை செய்வதற்கு வந்தபோது, கோயில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, கோயிலுக்குள் இருந்த 24 செப்பு கலசங்கள், பூஜை பித்தளை பொருள்கள், உண்டியல் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா் முனிநாதன் திருவள்ளூா் கிராமிய காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.
அதன்பேரில், திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை போலீஸாா் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.