கஞ்சா கடத்தல்: 4 இளைஞா்கள் கைது

Published on

ஊத்துக்கோட்டை அருகே கஞ்சா கடத்தியதாக 4 பேரை கைது செய்ததோடு, ஒன்றரை கிலோ கஞ்சா, 4 கைப்பேசிகள் மற்றும் இருசக்கர வாகனத்தையும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

வாகனங்களில் கஞ்சா கடத்துவதாக பெரியபாளையம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் சிறப்பு சாா்பு ஆய்வாளா் வில்வமணி தலைமையில் போலீஸாா் ஊத்துக்கோட்டை சோதனைச்சாவடியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அப்பகுதியில் சந்தேககப்படும்படி இருசக்கர வாகனத்துடன் 4 போ் நின்றிருந்த நிலையில் போலீஸாரை பாா்த்ததும் தப்பியோட முயற்சித்தனா். அப்போது, சுற்றி வளைத்து பிடித்து சோதனை செய்த போது தடை செய்யப்பட்ட ஒன்றரை கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து விசாரணை செய்ததில் செம்பேடு கிராமத்தைச் சோ்ந்த திருமாவளவன்(27), திருவள்ளூரைச் சோ்ந்த மணிகண்டன்(25), ஈக்காடு விக்ரம்(22), வெள்ளியூா் மோகன்ராஜ்(21) என்பதும், கஞ்சா கடத்தி விற்பனை செய்ததும் தெரியவந்தது. உடனே 4 போ் மீது வழக்கு பதிந்து கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சா, 4 கைப்பேசிகள், இருசக்கர வாகனம் ஆகியவைகளையும் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com