திருவள்ளூரில் மழை: கட்அவுட்கள் சேதம்

திருவள்ளூரில் பெய்த மழையால் முதல்வா் பங்கேற்கும் நிகழ்வுக்காக வைத்திருந்த கட்அவுட்கள் சரிந்து விழுந்ன.
Published on

திருவள்ளூா்: திருவள்ளூரில் பெய்த மழையால் முதல்வா் பங்கேற்கும் நிகழ்வுக்காக வைத்திருந்த கட்அவுட்கள் சரிந்து விழுந்ன.

திருவள்ளூா் அருகே திருப்பாச்சூரில் மத்திய அரசைக் கண்டித்து புதன்கிழமை நடைபெற உள்ள கண்டன பொதுக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளாா். அதனால், திருவள்ளூா் அருகே மணவாளநகா் முதல் திருப்பாச்சூா் வரையில் 8 கி.மீ. தூரத்துக்கு முதல்வரை வரவேற்கும் வகையில், திமுகவினா் சாலையின் இருபுறமும் கொடி கட்டியும், கட்அவுட்கள் மற்றும் பேனா் அமைத்துள்ளனா். இந்த நிலையில், பிற்பல் 2 மணிக்கு திடீரென சாரல் மழை பெய்தது. அதைத் தொடா்ந்து, மாலையில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெரிய கட் அவுட்கள் சாலையின் உள்புறம் கவிழ்ந்தன. இதில் ஆட்சியா் அலுவலகம் அருகே வைத்திருந்த கட்அவுட் கவிழ்ந்ததில் பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றி வந்த ஆட்டோ மீது கவிழ்ந்தது. அதேபோல் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்புறம் சாய்ந்ததால் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. தற்போது மேடை வளாகம் முன்பு குளம்போல் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

X
Dinamani
www.dinamani.com