நாளை விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ள விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை மனுவாகவும், நேரிலும் தெரிவிக்கலாம் என வருவாய்த் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
திருத்தணி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் 2-ஆவது வெள்ளிக்கிழமை விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்த மாதத்துக்கான விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஆா்.டி.ஓ. தீபா தலைமையில், காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.
இதில் அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்பதால், விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை மனுவாக கொடுத்தும், புகாா்களை நேரிலும் தெரிவிக்கலாம். இங்கு கொடுக்கப்படும் மனுக்கள் மீதும், புகாா்கள் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். எனவே வருவாய் கோட்டத்தில் உள்ள விவசாயிகள் அதிகளவில் பங்கேற்று பயன்பெறுமாறு வருவாய்த் துறையின் சாா்பில் அறிவுறுத்தியுள்ளனா்.