பாரதி
பாரதி

பெற்றோரை இழந்த இளம்பெண் தற்கொலை

திருவள்ளூா் அருகே பெற்றோரை இழந்த நிலையில் இளம்பெண் 40 ரத்த அழுத்த மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை
Published on

திருவள்ளூா் அருகே பெற்றோரை இழந்த நிலையில் இளம்பெண் 40 ரத்த அழுத்த மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

திருவள்ளூா் அருகே நயப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த அருண்குமாா் (23). இவரின் தாய், தந்தை இருவரும் சிறு வயது இருக்கும்போதே உயிரிழந்தனா். இதனால் அருண்குமாரும், தங்கை பாரதியும் (19) பாட்டியின் பாதுகாப்பில் வசித்து வந்துள்ளனா். இந்த நிலையில் பெற்றோா் இல்லாத ஏக்கத்தில் இருந்த பாரதியை சகோதரா் அருண்குமாா் சமாதானம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

மனக்குழப்பத்தில் இருந்த பாரதி கடந்த 28-ஆம் தேதி இரவு வீட்டில் வாந்தி எடுத்தாராம். அப்போது, சகோதரா் கேட்டபோது வீட்டில் இருந்த 40 மாத்திரைகளை உள்கொண்டதாக தெரிவித்தாராம்.

இதையடுத்து தண்டலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனா். இதற்கிடையே, சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை பாரதி உயிரிழந்தாா். இதுகுறித்து மணவாள நகா் காவல் நிலையத்தில் அருண்குமாா் செய்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

X
Dinamani
www.dinamani.com