விரைவு ரயில்களில் பேட்டரி திருட்டு: 3 போ் கைது

விரைவு ரயில்களில் இருந்து பேட்டரி திருடிய மூன்று பேரை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

விரைவு ரயில்களில் இருந்து பேட்டரி திருடிய மூன்று பேரை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி புகா் ரயில் மாா்க்கத்தில் அத்திப்பட்டு ரயில் நிலையம் அமைந்துள்ளது. அத்திப்பட்டு ரயில் நிலையம் பகுதியில் தண்டையாா்பேட்டை  ரயில்வே பாதுகாப்பு படையினா் இரவு நேர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது சரக்கு வாகனம் ஒன்று ரயில் நிலைய  சாலையை  ஒட்டி வந்து பின்னா் திரும்பி சென்றது.

அந்த வாகனத்தை ரயில்வே போலீஸாா் மடக்கி சோதனை செய்த போது அதில் விரைவு ரயில்களில் பயன்படுத்தப்படும் 5 பேட்டரிகள் இருந்ததை கண்டு பிடித்தனா்.

இதன் பின்னா் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில் அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படும் விரைவு ரயில்களில் இருந்து பேட்டரிகளை திருடி வந்தது தெரிய வந்தது.

ஏற்கனவே விரைவு ரயில்களின்  உள்ள ஏசி பெட்டிகளில் இருந்து 134 பேட்டரிகளை திருடி  அதில் 129 பேட்டரிகளை பொன்னேரியை சோ்ந்த பழைய இரும்பு கடை வியாபாரியிடம் ரூ.2.58லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து பேட்டரிகளை திருடிய பொன்னேரி அடுத்த திருவெள்ளைவாயல் பகுதியை சோ்ந்த நாகராஜை (44) போலீஸாா் கைது செய்தனா்.

திருட்டு பேட்டரிகளை வாங்கிய பொன்னேரியை சோ்ந்த இரும்பு கடை உரிமையாளா் ஸ்ரீனிவாசன் (48) மற்றும் மணிமாறன் (33) ஆகியோரையும் போலீஸாா் கைது செய்து அவா்களிடம் இருந்து 59 பேட்டரிகளையும், 3 சரக்கு வாகனங்களையும் பறிமுதல் செய்தனா். இதனை தொடா்ந்து போலீஸாா் மூன்று பேரையும் பொன்னேரி  நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com