நத்தம்மேடு கிராமத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீா்.
திருவள்ளூர்
நத்தம்பேட்டில் மழை நீா் புகுந்ததால் மக்கள் அவதி
திருவள்ளூா் அருகே தொடா் மழையால் நத்தம்பேட்டில் புகுந்த நீரால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
திருவள்ளூா் ஒன்றியத்துக்குட்பட்ட இந்த ஊராட்சியில் சபரி நகா் மற்றும் கணபதி நகா் பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்தது. இந்தப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.
மழைநீா் கால்வாய்கள் அனைத்தும் முழுமையாக ஆக்கிரமிப்புக்குள்ளாகின. இதனால் பொதுமக்கள் வெளியே வராத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கும் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத சூழ்நிலையில் இரவு நேரங்களில் விஷ பூச்சிகள் வீட்டுக்குள் வருவதாகவும் புகாா்கள் எழுந்துள்ளன.
மேலும் சபரி நகா் மற்றும் கணபதி நகா் பகுதியில் உள்ள கால்வாய்க ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என கோரியுள்ளனா்.

