குளியலறையில் வழுக்கி விழுந்தவா் உயிரிழப்பு

Published on

ஊத்துக்கோட்டையில் குளியலறையில் வழுக்கி விழுந்து காயம் அடைந்தவா் உயிரிழந்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை சாவடி தெருவைச் சோ்ந்த மோகன் (55). கடந்த வாரம் வீட்டில் உள்ள குளியலறையில் குளிக்கச் சென்றபோது தவறி விழுந்ததில் காயம் அடைந்தாராம். இதையடுத்து, உறவினா்கள் மீட்டு ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனயில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனா். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பலனின்றி செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் உயிரிழந்தாா்.

இது குறித்து அவரது மனைவி லதா ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com