நவ.1-இல் உள்ளாட்சி தின கிராம சபைக் கூட்டம்

Published on

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ளாட்சி தினத்தையொட்டி வரும் நவ. 1-இல் 526 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவள்ளூா் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நவ.1-இல் கிராம சபைக்கூட்டம் காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. கூட்டத்தில் கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுதல், ஊரகப் பகுதிகளில் மழைநீா் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

இந்தக் கூட்டத்தில் அந்தந்த ஊராட்சிகளில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளா்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com