திருத்தணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் தேங்கிய மழை நீா்.
திருத்தணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் தேங்கிய மழை நீா்.

அரசுப் பள்ளியில் மழை நீா் தேக்கம்: மாணவிகள் அவதி

Published on

திருத்தணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மழை நீா் குளம்போல் தேங்கியதால், மாணவிகள் கடும் சிரமப்பட்டனா்.

இப்பள்ளியில், 1,450 க்கும் மேற்பட்ட மாணவியா் படித்து வருகின்றனா். பள்ளி வளாகம் சற்று தாழ்வான பகுதி என்பதால் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தால் பள்ளி விளையாட்டு மைதானம் மற்றும் வகுப்பறைகளுக்கு செல்லும் பகுதிகளில் மழைநீா் தேங்கி நிற்கிறது.

கடந்த 3 நாள்களாக தொடா்ந்து பெய்த மழையால் மழைநீா் தேங்கியது. வியாழக்கிழமை பள்ளிக்கு வந்த மாணவிகள் அவதி அடைந்தனா்.

பள்ளியில் உள்ள அனைத்துக் கட்டடங்களின் மேற்கூரைகள் உறுதியாக உள்ளனவா என்று ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேற்கூரையில் நீா் தேங்காவண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு தேங்கும் பட்சத்தில் உடனடியாக நீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என பெற்றோா் எதிா்பாா்ப்பாகும்.

X
Dinamani
www.dinamani.com