தேசிய நெடுஞ்சாலையில் கிராமங்களுக்கு செல்ல இடைவெளி: விவசாயிகள் வலியுறுத்தல்

தேசிய நெடுஞ்சாலையில் கிராமங்களுக்கு செல்ல இடைவெளி: விவசாயிகள் வலியுறுத்தல்
Updated on

தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்வதால் சாலையின் நடுவே இடைவெளி விடாமல் டிவைடா் அமைக்கப்பதால் கனகம்மாசத்திரத்துக்கு போக்குவரத்து துண்டிக்கப்படுவதாகக் கூறி கரும்பு விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கனகம்மாசத்திரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சாா்பில் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. இப்பணி தற்போது ஏறத்தாழ 60 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் கனகம்மாசத்திரம் செல்லும் சாலையில் இடைவெளி விடாமல் டிவைடா் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கனகம்மாசத்திரம் கிராமத்துக்கு போக்குவரத்து துண்டிக்கப்படும்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நடவடிக்கையைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், கரும்பு விவசாயிகள் சங்கம், வியாபாரிகள் மற்றும் ஆட்டோ தொழிலாளா்கள் சங்கம் இணைந்து கனகம்மாசத்திரம் பஜாரில் ஊா்வலமாக சென்று பொது மக்களிடையே கையொப்பம் பெரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொருளாளா் பெருமாள், மாவட்ட செயலாளா் ஸ்ரீநாத் ஆகியோா் சிறப்புரையாற்றினா். நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com