தாய் தெய்வங்கள்

விஜயநகரர் மற்றும் நாயக்கர் காலத்தில் துர்க்கை அம்மன்

பண்டைய காலம் தொட்டு வழிமுறையாக தனிச் சிற்பங்களாக அமைத்த துர்க்கை அம்மனும் மகிஷாசுரமர்த்தினி உருவங்களும் தூண்களில் அலங்காரம் செய்யும் நிலைக்கு வந்தன.

24-08-2018

சோழர்களும் மகிஷாசுரமர்த்தினியும் (தொடர்ச்சி)

முதலாம் ராஜேந்திர சோழன் பன்மடங்கு வெற்றிகளைக் குவித்தான். அண்டை நாடுகளுடன் போரிட்டு வெற்றிபெற்றது மட்டுமின்றி, கடல் கடந்து சென்று அயல்நாடுகளில் தனது படைபலத்தை நிரூபித்தான்.

03-08-2018

சோழர்களும் மகிஷாசுரமர்த்தினியும்

சோழ மன்னர்கள் துர்க்கையைப் போற்றினர், வணங்கினர் என்பதற்கு அவர்கள் படைத்த கோயில்களில் துர்க்கைக்கு அவர்கள் அளித்த இடமும் மற்றும் காளிக்கு கோயில் எடுப்பித்ததும் அதனை நன்கு வெளிப்படுத்துகிறது.

06-07-2018

அன்னை உமை - மகிஷாசுரமர்த்தினி (தொடர்ச்சி 3)

உயர்ந்த பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக கிராமங்களிலும் ஆலமரத்தினடியிலும் துர்க்கையம்மன் சிற்பங்கள் வைத்து வழிபட்டு வந்துள்ளதை ஆங்காங்கே கிடைத்துள்ள சிற்பங்களைக் கொண்டு எளிதில் கூறமுடியும்.

08-06-2018

அன்னை உமை - மகிஷாசுரமர்த்தினி (தொடர்ச்சி 2)

எக்காலத்திலும் மக்கள் மனதில் கொள்ள வேண்டும் என்பதால்தான் மரம், சுதை, மண், இவற்றைப் பயன்படுத்தாது, என்றும் நிலைத்து நிற்கும் கற்களைத் தேர்ந்தெடுத்து...

11-05-2018

அன்னை உமை - மகிஷாசுரமர்த்தினி

சாந்தமாகவும் கனிவாகவும், அன்பாகவும் தன்னைச் சரணடைந்த பக்தர்களுக்குத் தாயாகவும் அவர்களுக்கு வேண்டியவற்றை வழங்கும் அன்னையாகவும் விளங்கும்போது பார்வதியாகவும் திகழ்பவள்தான் அன்னை உமையவள்.

30-03-2018

விஜயநகர, நாயக்கர் காலத்தில் கன்னிமார் எழுவர்

காரணகாரியங்கள் வெறும் பொழுதுபோக்குக் கதைகளாக இல்லாமல், அவை மக்களின் அன்றாட வாழ்க்கையை செம்மையுற நடத்த பெரும் துணையாக அமையும்படி புராணக்கதைகளாக இருந்துள்ளதையும் அறியமுடிகிறது.

23-02-2018

தமிழகத்தில் அன்னையர் எழுவருக்கு அமைந்த கோயில்கள்

வரலாற்றுச் சிறப்புப் பெற்ற செப்புப் பட்டயம் ஒன்று சேகரிக்கப்பட்டது. அதில்தான், முதன்முதலாக முதலாம் ராசேந்திர சோழனால் கட்டப்பட்டதுதான் கங்கைகொண்டசோழீச்சரம் என்ற செய்தி காணமுடிகிறது.

09-02-2018

அன்னையர் எழுவர்

சப்தமாதர்கள் என்றழைக்கப்படும் அன்னையர் எழுவர், தாய் தெய்வ வழிபாட்டின் முன்னோடித் தெய்வங்களாவர். இவர்கள், ஸ்கந்தனுடனும், சிவனுடனும் தொடர்புடையவர்களாக சித்தரிக்கப்படுகின்றனர்.

05-01-2018

திருவுறைமார்பன் (ஸ்ரீவத்சம்) - உமாசகிதமூர்த்தி (தாய் தெய்வங்கள்) - தொடர்ச்சி

விஷ்ணு சிற்பங்களும், செப்புத் திருமேனிகளும் இறைவனின் திருமார்பின் வலதுபுறத்தில் திருமகள் வாசம் புரிவதுபோல் ஒரு குறியீட்டுடன் படைக்கப்படுகின்றன.

22-12-2017

திருவுறைமார்பன் (ஸ்ரீவத்சம்) - உமாசகிதமூர்த்தி (தாய் தெய்வங்கள்)

சைவ, வைணவ வளர்ச்சியில் அவற்றின் தனிப்பெரும் நற்தெய்வங்களாக சிவனும் விஷ்ணுவும் இருந்தனர். இருப்பினும், இருவரது துணைவியரான அன்னை பார்வதியும், மகாலட்சுமியும் மிகவும் போற்றப்பட்டனர்.

08-12-2017

அம்பிகா இயக்கியும் காரைக்கால் அம்மையாரும் (சமணமும் சைவமும்) - தொடர்ச்சி

சமணப் பெண் தெய்வமான இயக்கி அம்மனும், சைவ அடியாரான காரைக்கால் அம்மையாரும், பெண் தெய்வங்களாகவும், நற்பண்பு மிக்கவர்களாகவும் தமிழகத்தில் போற்றப்பட்டுள்ளனர்

17-11-2017

தாய் தெய்வங்கள்

உலகம் தோன்றியது முதல் இன்றுவரை பெண் தெய்வங்கள் போற்றப்பட்டு வருதலும், அதற்கென தனித்தனியான புராணக் கதைகளும், கிராமியக் கதைகளும் கூறப்பட்டு வருவதையும் நாம் அன்றாட வாழ்வில் சந்தித்துக்கொண்டுதான் உள்ளோம். அத்தகைய பெண் தெய்வங்களை தாய் தெய்வங்கள் எனப் பெருமைப்படுத்தி அழைத்துள்ளனர் நம் முன்னோர். அத்தகைய தாய் தெய்வ வழிபாடு எவ்வாறு தோன்றியது? அவை தோன்றக் காரணமென்ன? அவ்வழிபாடு அனைவராலும் எவ்வாறெல்லாம் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதை நாம் அறிந்துகொள்ளும்விதமாக எழுதப்படுவதுதான் தாய் தெய்வங்கள் என்ற இந்த வரலாற்றுத் தொடர். 

பழைய கற்காலத்திலிருந்து ஆரம்பித்து புதிய கற்காலம், பெருங் கற்காலம், சங்க காலம், சமய இலக்கியங்கள் தோன்றிய காலத் தாய் தெய்வங்கள், பின்னர் கோயில்களில் பெண் தெய்வத்துக்கு வழங்கப்பட்ட இடம் ஆகியவற்றை தெளிவாக உரிய விளக்கம் மற்றும் படங்களுடன் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் இத்தொடர் அமையும். இந்திய நாகரிகங்களில் மிகவும் பழமையானது என ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகங்களைக் குறிப்பர். அப்பழமை வாய்ந்த நாகரிகங்களில் காணப்பட்ட தாய் தெய்வ வழிபாடும், அங்கு கிடைத்த தாய் தெய்வங்களையும் அறிந்துகொள்வது அவசியமானதாகும். தொடர்ந்து, தமிழகத்தில் சோழப் பேரரசர்கள் வணங்கிய பெண் தெய்வம் எது? சோழப் பேரரசர்கள் தோற்றிவித்த கோயில்களில் காணப்படும் பெண் தெய்வங்கள் யாவர்? பின்னர் தமிழகத்தை ஆட்சிபுரிந்த விஜயநகர மன்னர்கள், மராட்டியர் போன்றோர் பெண் தெய்வங்களை எவ்வாறெல்லாம் போற்றினர் என்பதையும் இங்கு எடுத்துக்கூரப்படும். மேலும், பெண் தெய்வங்கள் என்னென்ன வடிவில் காட்சியளிக்கின்றனர், அவர்களுக்கு என்ன பெயர், அவர்கள் தங்களது கைகளில் வைத்திருப்பது என்ன? எத்தனை கைகள் கொண்டுள்ளாள் என்ற விவரங்களையும் இத்தொடரில் காணலாம்.

கோயிலுக்குச் செல்லும் வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் கோயிற்கலையைப் பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் இதனைப் படித்து இன்புறவேண்டியதாகும். நமது நாட்டுக் கோயில்கள் அனைத்திலும் சிற்பங்களைக் கொட்டிக் குவித்துள்ளனர். ஒவ்வொரு சிற்பமும் ஓராயிரம் கதைகளையும் கருத்துகளையும் நம் வாழ்க்கைக்கு உதவும் வகையில் வெளிப்படுத்தியிருப்பதை அறிந்துகொள்ளலாம். தமிழகத்தில் கொட்டிக்கிடக்கும் கோயில்களில் காணப்படும் பெண் தெய்வச் சிற்பங்கள் பற்றிய அனைத்தும் இத் தொடரில் வெளிவர உள்ளது. கோயிலின் நுழைவுவாயிலில் உள்ள கொடிப்பெண் முதல் உள்ளே கருவரையில் வீற்றிருக்கும் உமையம்மை பற்றியும், ஸ்ரீதேவி, பூதேவி பற்றியும், சக்திவடிவான அம்மனின் பிற உருவங்களின் தோற்றத்துக்கான காரணங்களையும், அவற்றின் வடிவமைதியையும் இங்கு தெரிந்துகொள்ளலாம். அம்மனுக்கென தனிக்கோயில்கள் அமைந்துள்ள சிறப்புபெற்ற இடங்களையும் இங்கு காணலாம். கன்னிமார்கள் எழுவர் யார், அவர்களின் தோற்றப்பொலிவும், அவர்களின் உண்மைநிலையும் இதில் தெளிவாக்கப்படுகிறது. கோயிலை நாம் வழிபடும் இடமாக மட்டும் கருதாமல், அங்கு வடிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு சிற்பங்களும் என்ன சொல்கின்றன என்பதை அறிந்துகொள்ளுதல் அவசியமாகும்.

தினமணி இணையதளத்தில், தொல்லியல்மணியில் புதையுண்ட தமிழகம் என்ற வெற்றிகரமான தொடரை எழுதிய தொல்பொருள் ஆய்வாளர் ச. செல்வராஜ் அடுத்து எழுதும் தொடர்தான் இந்த தாய் தெய்வங்கள் குறித்த தொடர்.

ச. செல்வராஜ்.

ச. செல்வராஜ்.

ச.செல்வராஜ், தொல்லியல் துறையில், மண்டல உதவி இயக்குநராக (ப.நி.) பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டத்தில் அமைந்துள்ள கே.ஆர்.தோப்பூர் என்ற கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர். 1953-ல் பிறந்த இவர், இளங்கலை பட்டமும், சென்னைப் பல்கலைக் கழகத்தில் ‘பண்டைய வரலாறும் தொல்லியலும்’ என்ற பாடப்பிரிவில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். 1979 முதல், தமிழ்நாடு அரசுத் தொல்பொருள் ஆய்வுத் துறையில் மாவட்டத் தொல்லியல் அலுவலராகப் பணியில் சேர்ந்து, 2011-ல் பணிஓய்வு பெற்றார். 32 ஆண்டுகள் தொல்லியல், கல்வெட்டு, அகழாய்வு, கட்டடக் கலை, சிற்பக் கலை ஆகியவற்றில் திறம்படப் பணியாற்றியவர். இவரது குறிப்பிடத்தக்க சிறப்புப் பணி, அகழாய்வுதான்.

இவர் காஞ்சிபுரம், கரூர், கங்கை கொண்டசோழபுரம், பூம்புகார், படைவீடு, கண்ணனூர் (சமயபுரம்), அழகன்குளம், செம்பியன்கண்டியூர், தலைச்செங்காடு, மாங்குளம், மாங்குடி, பரிக்குளம், மோதூர் போன்ற பல நில அகழாய்வுகளில் பணியாற்றியுள்ளார். ஆழ்கடல் அகழாய்வில் அகழாய்வாளராகவும், மூழ்குநராகவும் பணிபுரிந்து, பல அரிய சங்ககால வாழ்விடப் பகுதிகளை வெளிக் கொணர்ந்துள்ளார். வானகிரிப் பகுதியில் மூழ்கிய கப்பல் ஒன்றை, மூழ்கிக் கண்டுபிடித்து, அவற்றில் இருந்த தொல்பொருட்களைச் சேகரித்துள்ளார்.

தமிழிலும் ஆங்கிலத்திலும் 50-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். தருமபுரி அகழ்வைப்பகம், தருமபுரி மாவட்டத் தொல்லியல் கையேடு, மராட்டியர் அகழ்வைப்பகம் போன்ற மாவட்ட வரலாற்று நூல்களும், கோயில்களைப் பற்றிய ‘தகடூர் நாட்டுக் கோயில்கள் தொகுதி – 1’, ‘தகடூர் நாட்டில் சமணமும் பௌத்தமும்’ என்ற நூல்களும், ‘மனோரா கையேடு’ என்ற நூலையும் எழுதியுள்ளார். வரலாறு, தொல்லியல் இவற்றில் மிகுந்த ஈடுபாட்டோடு தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

தொல்லியல்மணியில் 'புதையுண்ட தமிழகம்' என்ற வெற்றிகரமான தொடரை எழுதியவர். தொடர்புக்கு – selvaraj.sabapathi@gmail.com.

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை