யுத்தபூமி

அத்தியாயம் 82 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி

இந்திரன் இன்றி ரிக் சமூகத்துக்கு வெற்றியும் இல்லை; படை பலமும் இல்லை; மேலாக, போர்க்களம் இமில்லை எனும்பொழுது, இந்திரன் யார் என்ற தேடுதல் அவசியமாகிறது.

22-02-2019

அத்தியாயம் 81 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி

ரிக் வேத இருடிகள் பிராமணர்களாகவும் சத்திரியர்களாகவும், சூத்திரர்களாகவும் தொழில் முறையில் பிரிந்திருக்கவில்லை என்பது தெளிவாக்குகிறது.

01-02-2019

அத்தியாயம் 80 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி

ரிக் விவரிக்கும் சுற்றுச்சூழல்களால் ஆரம்பகால ரிக் போர்கள் சப்த சிந்துப் பகுதியில் நடந்தவை. அதாவது, இன்றைய பாகிஸ்தானிலும் இந்தியாவிலும் பிளவுண்டிருக்கும் பஞ்சாப் பகுதியில் நிகழ்ந்தவை.

28-09-2018

அத்தியாயம் 79 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி

தமிழ் மரபில் கரந்தை வீரர்கள், அதாவது நிரை மீட்டுப்பட்ட வீரர்கள் போற்றப்பட்டனர். அவரது வீரம் புகழப்பட்டது. சங்க காலத்தில் நிரை மீட்டுப்பட்ட வீரர்களுக்கே நடுகல் எடுக்கப்பட்டுள்ளது.

24-08-2018

அத்தியாயம் 78 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி

காவிட்டியின் நிகழ்வுகள் ஒன்றையடுத்து ஒன்றாக இதே வரிசையில்தான் அமைந்திருந்தன என்பதற்கு எந்த இலக்கணமும் இல்லை. ரிக்கின் பத்து மண்டலங்களிலும் இச்செய்திகள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன.

17-08-2018

அத்தியாயம் 77 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி

ரிக் வேதத்தில் ஆநிரை தொடர்பான எழுந்த போர்கள் காவிட்டி அல்லது காவிஷ்டி என்று அழைக்கப்படுகிறது. இந்த வகையில், ஆநிரை தொடர்பான பூசல் அல்லது போர் குறித்த பழைமையான ஆவணம் ரிக் வேதத்தில் இருந்து கிடைக்கிறது.

03-08-2018

அத்தியாயம் 76 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி

கடுமையான பயிற்சி மூலமும், அறிவு விருத்தியுடனும், சமூகத்தின் ஆன்மிகத் தேவை, மருத்துவத் தேவை, உணவுத்  தேவை, சந்ததிப் பெருக்கம் உள்பட வளமை சார்ந்த எல்லா சடங்குகளை நிறைவேற்றித் தருபவரே சாமியாடி.

06-07-2018

அத்தியாயம் 75 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி

தனி மனிதனின் தீமைகளை மாற்றிவிட முடியும் எனில், ஒரு சமூகத்தின் தீமைகளையும் மாற்றிவிடமுடியும் என்ற நம்பிக்கையில் உருவானதே பொதுப்பலியாடு முறை.

29-06-2018

அத்தியாயம் 74 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி

காலம் செல்லச் செல்ல மக்கள், தொல்பழங்கால மக்களிலிருந்து இக்கால மக்கள்வரை மந்திர ஆற்றல்களைப் பலவகைகளில் அவரவர் விருப்பம்போல் பயன்படுத்தி வருவதைக் காணமுடிகிறது.

22-06-2018

அத்தியாயம் 73 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி

தமிழர் மரபில், பொங்கல் திருநாளைத் தொடர்ந்து வரும் கரிநாள் விழா, உண்மையில் முன்னோரை வழிபட்டு, அவருக்கு நன்றி செலுத்தும் வழிபாடாகும்.

08-06-2018

அத்தியாயம் 72 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி

கந்து வழிபாடு, போலிப் பொருள் வழிபாட்டுக்கு சிறந்ததொரு உதாரணமாகும். மரத்துண்டு ஒன்றை நட்டு, அதற்கு வழிபாடு செய்வது தொல்தமிழர் மரபில் நிலவி வந்த வழக்கமாகும். அதுவே கந்து வழிபாடு என்று குறிப்பிடப்படுகிறத

25-05-2018

அத்தியாயம் 71 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி

இருவகைப்பட்ட விலக்குகளையும் மக்கள் புனிதமான நடத்தை விதிகளாக ஏற்று கடைப்பிடித்து வருகின்றனர். விலக்குகள், சமூகத்தினரால் தடைகள் மற்றும் ஒழுக்க விதிகளாகவே எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

11-05-2018

யுத்த பூமி

நடுகற்கள் ஊடே மேற்கொள்ளப்பட்ட மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் வரலாற்றையும் பண்பாட்டையும் தேடும் தொல்லியல் பயணம்தான் ‘யுத்த பூமி’.

இப்பயணம், தொல்பழங்காலத்தில் இருந்து தற்காலம் வரையிலான மனித இனம் புரிந்த போர்களின் வகைகளில், நடுகல் போர்களின் தனித்துவக் குணங்களை அடையாளம் காண்கிறது. மு.பொ. 4-ம் நூற்றாண்டில் இருந்து பொ.நூ. 16 (கி.மு.400 - கி.பி.1700) வரை, இரண்டாயிரம் ஆண்டுகள் அறுபடாத தொடர்ச்சியுடன் நடுகல் எழுப்பும் மரபு நம்மிடையே நிலவியிருந்ததை, அண்மைக்காலம்வரை கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருள் சான்றுகள் மெய்ப்பிக்கின்றன. மூத்தோர் நினைவுச்சின்ன வகையான பெருங்கற்படைச் சின்னங்களைக் கணக்கில் கொண்டால், இம்மரபு இன்றைக்குவரை 3000 ஆண்டுகளுக்கும் மேம்பட்ட பிரமிப்பூட்டும் அறுபடாத தொடர்ச்சியைக் கொண்டிருப்பது என்பது விளங்குகிறது.

‘நடுகல்’ என்பது நடப்பட்ட கல் எனப் பொருள்மயக்கம் தருவதாக இருந்தாலும், வீரரைப் புதைத்த இடத்தில் அல்லது வீரரை நினைவுகூர்ந்து பிற இடத்தில் அமைக்கப்பட்ட கல்லே நடுகல் என அழைக்கப்படுகின்றது. இறந்தவர்கள் எல்லோருக்கும் கல் நடுதல் வழக்கமாகப் போற்றப்படவில்லை. வீரப்பண்பும், தமக்கென வாழாது சமுதாயத்துக்காகப் போராடி மாய்ந்த பெருநிலையுமே நடுகல் எழுப்பப்பட முதன்மைக் காரணமாக இருக்கின்றது.

நடுகல் வழிபாடு என்பது ‘மூத்தோர் வழிபாட்’டின் ஓர் அங்கமாகிய ‘வீர வழிபாட்டு’க்குச் சான்றாக இருப்பதாகும். நடுகல் வழிபாடு, தற்காலத்தில் எழுந்த உருவ வழிபாட்டுக்கு அடிப்படையாக அமைகின்றன என்பதை நாட்டுப்புறவியல் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. இவ்வழிபாடே, காலந்தோறும் நடுகற்களை எழுப்பும் மரபுக்குப் புறத்தூண்டுதலாக இருக்கிறது. இம்மரபு, தலைமுறைகளுக்குக் கொண்டுசெல்லப்படும் பண்பாட்டுச் செழுமையாகியுள்ளது. இச்செழுமைதான், ஒரு வட்டச்சுழற்சியில் வீரத்தைப் போருக்கு அழைத்துச் செல்கிறது. அப்போரும், பண்பாட்டின் அடையாளமாக மிளிர்வதாக இருக்கிறது.

‘யுத்த பூமி’ எனும் இத்தொடர், அத்தியாயங்களால் ஆக்கப்பட்டுள்ளது. அத்தியாயங்கள் தனித்தனி கட்டுரைகள் அல்ல. ஒவ்வொரு அத்தியாயமும் ஒன்றிலிருந்து ஒன்று நீட்சி அடைபவை; கிளைப்பவை. வாரம் ஒரு அத்தியாயம் எனத் திட்டமிட்டிருந்தாலும், ஒரு சில அத்தியாயங்கள் முழுமை பெற சில வாரங்கள் ஆகும். இது வாசகர்களின் கவனத்துக்கான தகவல்.

த. பார்த்திபன்

த. பார்த்திபன்

த. பார்த்திபன். தகடூர் பார்த்திபன் என்று அழைக்கப்படுவர். தருமபுரியை பிறப்பும், வாழிடமாகவும் கொண்டிருப்பவர். இளங்கலை அறிவியல் கல்வியுடன், குடும்பத் தொழில்களில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர். சங்க இலக்கியத்திலும், நவீன இலக்கியத்திலும் ஆர்வம் மிகுந்தவர். தொல்லியலும் வரலாறும் இவர் விருப்பமுடன் தனிமுறையில் கற்றவை. ‘சங்ககாலத் தமிழகமும் அதியர் மரபினரும்’, ‘கிருஷ்ணகிரி மாவட்டம் – சங்ககாலம்’, ‘தொன்மைத் தடயங்கள் – தொகுதி – 1’, ‘கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்றுத் தடயங்கள் தொகுதி - 1, ஊத்தங்கரை வட்டம்’ ஆகிய புத்தகங்கள் இவரது ஆக்கத்தில் இதுவரை வெளிவந்துள்ளன. தொடர்புக்கு – thagadoorparthiban@gmail.com

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை