Enable Javscript for better performance
பெண் கல்விக்கு கலங்கரை விளக்காய் பான்செக்கர்ஸ் கல்லூரி...- Dinamani

சுடச்சுட

  

  பெண் கல்விக்கு கலங்கரை விளக்காய் பான்செக்கர்ஸ் கல்லூரி...  

  By DIN  |   Published on : 11th October 2019 12:46 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  clg1

  தஞ்சை மண்ணுக்கு பெருமை சேர்க்கும் வகையில், பெண் கல்விக்கு கலங்கரை விளக்காய் சுடர்விடும் பான்செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, தேசியத் தரச்சான்றிதழ் மதிப்பீட்டிற்குச் செல்ல இருக்கும் கல்லுôரிகளுக்கு மென்டார் கல்லூரியாகத் திகழ்கிறது.
  இக்கல்லூரி மானுடவியல், கலை, அறிவியல், தகவல் தொழில்நுட்பவியல் புலம் என நான்கு புலங்களாகப் பிரிக்கப்பட்டு, இவற்றின்கீழ் 18 துறைகள் இயங்கி வருகின்றன. இவற்றுள் இளங்கலைப் பிரிவுகள் 18 துறைகளிலும், முதுகலைப் பிரிவுகள் 11 துறைகளிலும், ஆய்வியல் நிறைஞர் பிரிவுகள் ( எம்.பில்) 6 துறைகளிலும், முனைவர் பட்ட (பி.எச்டி) ஆராய்ச்சி கலை மற்றும் அறிவியல் புலங்களிலும் நடைபெற்று வருகின்றன.
  2019 -20ஆம் கல்வியாண்டில் 4,500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். அவர்களுள் 75 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கிராமப்புறங்களிலிருந்து வருகின்றனர்.
  ஏட்டுக்கல்வி மட்டுமின்றி மதிப்புக்கல்வி, ஆன்மிகம், கலை, விளையாட்டு, நவீன ஆடை வடிவமைப்பு, கைவினைப் பொருள்கள் தயாரிப்பு, காளான் வளர்ப்பு முறை, மண்புழு உரம் தயாரித்தல், நுண்ணுயிரி உரங்கள் தயாரிப்பு முறை, நெகிழியில்லா சமுதாயத்தை உருவாக்கும் முறை என அனைத்திலும் பயிற்சி கொடுத்து, மாணவிகளைத் தொழில்துறை பெண் உரிமையாளர்களாக உருவாக்கி வருகிறது இக்கல்லூரி.
  மேலும் இறைவி (solution) INCUBATION CENTER இன்குபேஷன் சென்டர் என்ற ஆய்வுக்குழு, மகளிர் நலன் கருதி மூலிகை சார்ந்த நாப்கின் தயாரித்தல் மற்றும் பயிற்சியளித்தலை மாணவிகளுக்கு வழங்கி வருகிறது. 
  மாணவிகளே மாணவிகளுக்குத் தொண்டாற்றுகிற மாணவிகள் நலக்குழு இயங்கி வருகிறது. இதன்வழியாக தொலைதூர கிராமப்புற மாணவிகளுக்கு மதிய உணவை வழங்கும் மன்னா என்னும் உணவுத்திட்டம் செயல்பட்டு வருகின்றது. 
  அதுமட்டுமன்றி மாணவிகளுக்காக மாணவிகளே (I CAN) நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். அந்நாளில் உணவு மற்றும் பல்வேறு பொருள்களைத் தயாரித்து விற்பனை அங்காடிகள் அமைத்து, கல்விக் கட்டணம் செலுத்த இயலாத மாணவிகளுக்கும், ஆதரவற்ற மாணவிகளுக்கும் கல்விக் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர்.
  மேலும் SAFE திட்டத்தின் வழியும் மாணவிகள் பயனடைகின்றனர். அம்மா, அப்பா இருவரும் இல்லாத மாணவிகளை கல்லூரியே தேர்ந்தெடுத்து, கல்லூரியின் குழந்தைகளாகக் (BONCHILD) கருதி அவர்களுக்கானப் படிப்புச் செலவினங்கள் மற்றும் பல்வேறு சலுகைகளை வழங்குகிறது.
  மேலும், என்.எஸ்.எஸ். ஆர்.ஆர்.சி, ஒய்.ஆர்.சி, யூபிஏ, லியோ கிளப், எக்ஸ்னோரா, அய்க்கப், ரோட்ராக்ட், சிட்டிசன் கன்ஸ்யூமர் கிளப், சுயஉதவிக் குழு போன்ற பல்வேறு அமைப்புகள் கல்லூரியில் செயல்பட்டு வருகின்றன.
  இவ்வமைப்புகள் மருத்துவ முகாம்,இயற்கை பேரிடர் நிவாரணம், விழிப்புணர்வு நிகழ்வுகள், சமூக மதிப்புகள் குறித்தும் தொண்டாற்றுகின்றன. 
  உன்னத பாரத இயக்கம் கீழ், ஐந்து கிராமங்களைத் தத்தெடுத்து அங்கு வசிக்கும் மகளிருக்கு பல்வேறு நல உதவிகளை வழங்கி வருவதோடு, மகளிர் சுய உதவிக் குழுக்களை நிறுவி தொழில் சார்ந்த பயிற்சிகளையும் அளித்து வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. 
  இந்திரா காந்தி திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் (IGNOU)மாவட்டக் கல்வி மையமாக இயங்கி வரும் இக்கல்லூரியில் சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகள் பெறும் வசதியும் அமைந்துள்ளது.
  இதில் கல்லூரி மாணவிகள் மற்றும் பிற கல்லூரி மாணவிகள், மேற்படிப்பைத் தொடர இயலாதவர்களும் பயன்பெறுகின்றனர்.
  பான் செக்கர்ஸ் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களோடு கல்வி, சமூகம், இயற்கை அனைத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இத்தகைய சிறப்புகளோடு வருங்கால சமுதாயத்தை வளமுள்ளதாக உருவாக்கும் நோக்கில், மாணவிகளை உருவாக்கி வருவதில் பான்செக்கர்ஸ் கல்லூரி பெருமை அடைகிறது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai