ஆம்பூரில் ரூ. 165.55 கோடியில் புதை சாக்கடைத் திட்டம்

ஆம்பூரில் நகராட்சி சார்பில் ரூ. 165.55 கோடி மதிப்பீட்டில் புதை சாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆம்பூரில் ரூ. 165.55 கோடியில் புதை சாக்கடைத் திட்டம்

ஆம்பூரில் நகராட்சி சார்பில் ரூ. 165.55 கோடி மதிப்பீட்டில் புதை சாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் மாநில வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி வழிகாட்டுதலில் ஆம்பூர் நகரில் நடைபெற்று வரும் திட்டங்கள்:
 அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ. 50.47 கோடி மதிப்பீட்டில் குடிநீர் பகிர்ந்தளிப்பு முறையை மேம்படுத்தும் பணி, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ. 3.48 கோடியில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள், ரூ.3 கோடியில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.46 லட்சத்தில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் மற்றும் குப்பைகளை உரமாக்கும் மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
 ரூ.95 லட்சத்தில் திடக்கழிவு மேலாண்மைப் பணிக்கு பேட்டரி மூலம் இயங்கும் 53 பொது சுகாதார வாகனங்கள் வாங்கப்படுகின்றன. ரூ.22 லட்சத்தில் திடக்கழிவு மேலாண்மைப் பணிக்கு 4 இலகு ரக வணிக வாகனம் வாங்கப்படுகின்றன. ரூ.28 லட்சத்தில் திடக்கழிவு மேலாண்மைப் பணிக்கு ஜேசிபி வாகனம் வாங்கப்படுகிறது. ரூ.18 லட்சத்தில் திடக்கழிவு மேலாண்மைப்ணி பொது சுகாதார ஆதார மீட்பு மையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
 ரூ.62 லட்சத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 779 தனி நபர் கழிப்பறைகள் கட்டும் பணி, ரூ.6 கோடியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தில் மழைநீர் வடிகால்வாயுடன் கூடிய சிமெண்ட் சாலைகள் மற்றும் தார் சாலைகள் அமைக்கும் பணி, ரூ.7.50 கோடி மதிப்பீட்டில் மரபு வழிக் கழிவுகளை தாதுப் பொருள்களாக மாற்றம் செய்யும் பணி உள்பட நகராட்சி சார்பில் மொத்தம் ரூ. 238.71 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 வேலூர் மாவட்ட ஆட்சியர் அ. சண்முக சுந்தரம், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் சி.விஜயகுமார் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் ஆம்பூர் நகராட்சி ஆணையர் த. சௌந்தரராஜன், நகராட்சிப் பொறியாளர் இல.குமார் ஆகியோர் நகராட்சியில் அரசின் பல்வேறு நலத் திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com