"உணவே மருந்து' தாரக மந்திரம்...!

உணவு பொருள் உற்பத்தி துறையில் முன்னணி வகிக்கும் ஆச்சி மசாலா நிறுவனம், உணவே மருந்து என்ற கொள்கையை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
"உணவே மருந்து' தாரக மந்திரம்...!

உணவு பொருள் உற்பத்தி துறையில் முன்னணி வகிக்கும் ஆச்சி மசாலா நிறுவனம், உணவே மருந்து என்ற கொள்கையை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
 இந்த நிறுவனத்தில் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக உற்பத்தி செய்யும் விளை பொருள்களை நவீன முறையில் பதப்படுத்தும் கிடங்கு கும்மிடிப்பூண்டி அருகே அமைக்கப்பட்டது. இதைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய இணையமைச்சர் ராமேஸ்வர் தேலி பேசுகையில், "விளைபொருள்களை நவீன முறையில் பாதுகாப்பது மிக முக்கியம். ஆச்சி மசாலா நிறுவனம் இதன் மூலம் பெருமை மிகுந்த உணவு உற்பத்தி பூங்காவாக திகழ்கிறது' என்று குறிப்பிட்டார்.
 அத்துடன் அவர், "உணவுப் பொருள்கள் வீணாவதைத் தடுக்கும் பொருட்டு மத்திய அரசு ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த காலங்களில் உணவு பதப்படுத்தும் துறைக்கு நிதி எதுவும் ஒதுக்கப்பட்டதில்லை. தற்போது இந்தத் துறைக்கு தனிக்கவனம் செலுத்தி மத்திய அரசு ரூ.1,400 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் வாயிலாக பல மாநிலங்களில், சிறிய, பெரிய உணவுப் பூங்காக்களை நிறுவி, மக்களுக்குத் தரமான உணவு பொருள்கள் வழங்குவதே, மத்திய அரசின் குறிக்கோள்.
 ஆச்சி மசாலா நிறுவனம், வட மாநிலங்களில், தொழில் தொடங்கி, அங்குள்ள மக்களுக்கு தரமான உணவும், வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும். வடகிழக்கு மாநிலமான அசாமில் தேயிலை, இஞ்சி, மஞ்சள் போன்ற உணவுப் பொருள்கள் ஏராளமாக விளைகின்றன. அதை சார்ந்த தொழிலை விரிவுபடுத்த நானும் மத்திய அரசும் முழு மூச்சாக செயல்படுகிறோம்' என்று அவர் கூறினார்.
 இந்த நிகழ்ச்சியில், தமிழக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசும்போது, "மக்களுக்கு தரமான உணவுகளை வழங்க இயற்கையோடு இணைந்து அத்தனை செயல்களையும் இந்நிறுவனம் செய்து கொண்டிருக்கிறது. அவர்களது லட்சியங்கள் அனைத்தும் நமது தாயகத்தையும், நமது தாய்மார்களையும் சார்ந்தே அமைந்திருக்கிறது. மேலும் விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதல் செய்யும் முறையை அறிமுகப்படுத்தியும், இதனால் பெரிய அளவிலான விவசாயிகளின் பொருள்களை பதப்படுத்தும் கிடங்கை உருவாக்கியும் உள்ளனர் என்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. 4 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளைக் கொடுத்து அதன் மூலமாக அவர்கள் குடும்ப வாழ்வாதாரத்தையும் பேணிக் காத்து சமுதாய சிந்தனையோடு செயல்பட்டு வரும் இந்நிறுவனம் உணவே மருந்து என்பது தொழிலைக் கடந்த சேவை உணர்வை வெளிப்படுத்தி வருகிறது' என்றார்.
 ஆச்சி உணவுப் பொருள் குழுமத்தின் நிறுவனத் தலைவர் ஏ.டி.பத்மசிங் ஐசக் பேசும்போது, "இந்திய மக்கள் நோயின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதற்காக நாங்கள் உயிரோட்டமுள்ள உணவே மருந்து என்ற கொள்கை முழக்கத்தை, மக்கள் முன்னால் வைத்து அந்த லட்சியத்தை நோக்கி எங்கள் பயணத்தை தொடங்கினோம். அதற்காக இந்தியாவின் பல பகுதி விவசாயிகளை சந்தித்து தரமான விளைபொருள்களை கொள்முதல் செய்கிறோம். அவைகளை பாதுகாக்க நவீன குளிர் பதன கிட்டங்கியை அமைத்தோம். உணவுப் பொருளின் தரத்தை உறுதி செய்ய உலகத் தரம் வாய்ந்த பரிசோதனை கூடத்தை தோற்றுவித்தோம்.
 இதன்மூலம் மக்களுக்கு இயற்கையான, தரமான உணவுகளை வழங்கி எங்கள் கொள்கையை வெற்றியடைய செய்து கொண்டிருக்கிறோம். எங்களது இந்த லட்சியத்தின் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்குகிறோம். மக்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறோம்' என்று குறிப்பிட்டார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com