ஏழை மாணவர்களுக்கு உதவும் "என்ரிச் சொசைட்டி'

ஆம்பூரில் ஏழை மாணவர்களுக்கு உதவிடும் வகையில் ஐஏஎஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி மையத்தை என்ரிச் சொசைட்டி தொடங்கியுள்ளது.
ஏழை மாணவர்களுக்கு உதவும் "என்ரிச் சொசைட்டி'

ஆம்பூரில் ஏழை மாணவர்களுக்கு உதவிடும் வகையில் ஐஏஎஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி மையத்தை என்ரிச் சொசைட்டி தொடங்கியுள்ளது.
 இதுகுறித்து என்ரிச் சொசைட்டி நிறுவனரும், சூப்பர் நேஷன் பார்ட்டி நிறுவனருமான மதார் கலீலூர் ரஹ்மான் கூறியது:
 வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் ஐஏஸ் கனவுகளோடு உள்ளனர்.
 ஆனால் அவர்கள் அதற்கான பயிற்சியைப் பெற சென்னைக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
 அவர்களுடைய பொருளாதாரச் சூழ்நிலை அதற்கு இடம் கொடுப்பதில்லை. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆம்பூர் பகுதியில் ஐஏஎஸ் தேர்வுக்கான பயிற்சி மையத்தைத் தொடங்கி செயல்படுத்தி வருகிறேன்.
 அதோடு மட்டுமல்லாமல் ஏழை, எளியவர்களுக்கு தொழில் பயிற்சி, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் என்ரிச் சொசைட்டி மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 மேலும் விவரங்களுக்கு: எண்.1, வெங்கடசமுத்திரம் ரோடு, ஈத்கா அருகில், பாங்கி நகர், துத்திப்பட்டு, ஆம்பூர்-635 811.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com