கணிசமான லாபம் தரும் காகித கவர் தயாரிப்பு

கடிதப் போக்குவரத்து, கூரியர் சேவை, அலுவலகம், நீதிமன்றம், பள்ளி, கல்லூரிகளில் என அன்றாடம் நமது பயன்பாட்டில் நீக்கமற நிறைந்திருக்கும் காகித கவர் தயாரித்தும் கணிசமான லாபத்தை அள்ள முடியும்.
கணிசமான லாபம் தரும் காகித கவர் தயாரிப்பு

கடிதப் போக்குவரத்து, கூரியர் சேவை, அலுவலகம், நீதிமன்றம், பள்ளி, கல்லூரிகளில் என அன்றாடம் நமது பயன்பாட்டில் நீக்கமற நிறைந்திருக்கும் காகித கவர் தயாரித்தும் கணிசமான லாபத்தை அள்ள முடியும்.
 குறைந்த முதலீட்டில் குடிசைத் தொழிலாகவே இதைத் தொடங்கலாம். அரசின் மானிய உதவியையும் பெற முடியும்.
 ஒரு நாளில் 200 கிலோ பேப்பர் வீதம், மாதத்தில் 25 நாளில் 5 டன் பேப்பரில் கவர்கள் தயாரிக்கலாம். ஒரு கிலோ பேப்பர் ரூ.29 வீதம் 5 டன்னுக்கு ரூ.1.45 லட்சம், வாடகை, மின் கட்டணம், தொழிலாளர்களின் ஊதியம் என ரூ.23 ஆயிரத்தையும்சேர்த்தால் மாதத்துக்கு ரூ.1.68 லட்சம் செலவிட வேண்டும்.
 ஒரு சிறிய கவர் விலை ரூ.6 முதலும் பெரிய கவர் விலை ரூ.200 வரை யிலும் அதன் அளவுகளுக்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது. இந்த விற்பனை விலையோடு, உற்பத்தி செலவை ஒப்பிடுகையில் குறைந்தபட்சம் 10 சதவிகித லாபம் அல்லது மாதம் சராசரியாக ரூ.20 ஆயிரம் வரை கிடைக்கும். கடைகளில் நேரில் ஆர்டர் எடுத்து சப்ளை செய்தால் கூடுதல் விலைக்கு விற்கலாம். லாபமும் அதிகரிக்கும். உற்பத்தியை அதிகரித்தால் அதற்கேற்ப லாபம் கூடும்.
 தொழில் கூடம் : 20 அடி நீளமும் 16 அடி அகலமும் கொண்ட தொழில்கூடத்தை 3 பகுதியாக பிரித்து ஒரு பகுதியில் இயந்திரம், மற்ற பகுதிகளில் அலுவலகம், பொருள்கள் வைப்பறை என பயன்படுத்தலாம்.
 பேப்பர் கவர் இயந்திரம் ரூ.2.50 லட்சமும், அலுவலக நாற்காலிகள், இருக்கைகள் மற்றும் இதரப் பொருள்களுக்கு ரூ.32 ஆயிரம் என ரூ.2.82 லட்சம் முதலீடாகத் தேவைப்படும். இது மட்டுமல்லாமல், முதல் மாத உற்பத்தி செலவு ரூ.1.68 லட்சம் தனியாக செலவிட வேண்டிவரும்.
 பேப்பர் கவருக்கென பிரவுன் நிற கிராப் பேப்பர் ரப்பர் பேண்ட் பசை காய்ச்ச மரவள்ளிக்கிழங்கு மாவு, துத்தம், பிளாஸ்டிக் கட்டு கயிறு ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். பேப்பர் கவர் இயந்திரங்கள் பொள்ளாச்சி, கோவை நகரங்களிலும், கிராப் பேப்பர் உடுமலை உள்ளிட்ட பேப்பர் மில்களிலும் கிடைக்கிறது.
 சந்தை வாய்ப்பு: மருந்து கடையில் சிறிய பேப்பர் கவர்கள் பயன்படுத்தப்படுகிறது. பேக்கரி, பேன்சி ஸ்டோர், டெக்ஸ்டைல், சலவையகம், தையலகங்கள் ஆகியவற்றில் பெரிய பேப்பர் கவர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் விற்பனை வாய்ப்புக்கு பஞ்சமில்லை.
 தயாரிக்கும் முறை: வெவ்வேறு அளவு கவர்களை தயாரிக்க அதற்குரிய பிளேட், பேப்பர் ரோலை இயந்திரத்தில் பொருத்த வேண்டும். கவரின் மத்திய பகுதி மற்றும் கீழ் பகுதியை ஒட்ட தேவையான பசையை இயந்திரத்தில் உள்ள டேங்கில் நிரப்ப வேண்டும்.
 பின்னர் இயந்திரத்தை இயக்கினால் பிளேட்டின் கீழ்பகுதி வழியாக பேப்பர் ஓடும். அதன் மேல் பகுதியில் பேப்பர் மடித்து, கவரின் மத்திய பகுதியில் பசை ஒட்டும். அங்கிருந்து நகரும் பேப்பர் குறிப்பிட்ட அளவில் துண்டிக்கப்பட்டு அடுத்த பகுதிக்குச் செல்லும். அங்கு கீழ்பகுதி ஒட்டப்பட்டு கவர் தயாராகும். உற்பத்தியான கவர் 50 எண்ணிக்கை சேர்ந்தவுடன் ஒரு முறை விளக்கு எரியும். கவர்களை 50 அல்லது 100 எண்ணிக்கையில் அடுக்கி வைத்தால் விற்பனைக்கு தயார். இயந்திரம் துவக்கத்தில் ஓடும்போது பசை சீராக செல்கிறதா, ஒட்டப்படுகிறதா, சரியான அளவுகளில் வெட்டப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். ஓட்டம் சீரானவுடன் ஒரு இயந்திரம் மூலம் நாள்தோறும் 8 மணி நேரத்தில் 200 கிலோ பேப்பரில் கவர் தயாரிக்கலாம். அளவுகளுக்கேற்ப இந்த எண்ணிக்கை மாறுபடும். படித்த இளைஞர்கள் மட்டும்தான் இந்தத் தொழிலை தொடங்க முடியும் என்பதில்லை. ஆர்வமும், திறமையும் இருந்தால் படிப்பறிவில்லாதாவர்களும் இந்தத் தொழிலை தொடங்கி கணிசமான லாபம் ஈட்டலாம்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com