கழிவுநீர் சுத்திகரிப்பில் சாதனை...

ராணிப்பேட்டையில் தோல் பதனிடும் தொழிற்சாலைகளின் கழிவுநீரை சுத்திகரித்து மீண்டும் மறுபயன்பாட்டுக்கு வழங்கி "ராணிடெக்' பொதுக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் சாதனை செய்து வருகிறது.
கழிவுநீர் சுத்திகரிப்பில் சாதனை...

ராணிப்பேட்டையில் தோல் பதனிடும் தொழிற்சாலைகளின் கழிவுநீரை சுத்திகரித்து மீண்டும் மறுபயன்பாட்டுக்கு வழங்கி "ராணிடெக்' பொதுக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் சாதனை செய்து வருகிறது.
ராணிப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கி வரும் 92 தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை சுத்திகரிக்க ராணிடெக் என்ற பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கடந்த 1995-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்தியாவிலேயே முதன்முறையாக ஐஎஸ்ஓ 9001 தரச்சான்றிதழ் மற்றும் உலக அளவில் முதன்முறையாக சுற்றுச்சூழலுக்கான ஐஎஸ்ஓ 14001 என்ற தரச் சான்றிதழ் பெற்ற ஒரே பொது சுத்திகரிப்பு நிலையம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் சுத்திகரிப்பு திறன் நாளொன்றுக்கு 4.5 மில்லியன் லிட்டர். பூஜ்ஜிய (ZLD) முறையில் கழிவுநீரை மறுசுழற்சி செய்யும் திட்டம் சுமார் ரூ. 45 கோடியில் 2012-ஆம் ஆண்டு முதல் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஏற்றுமதிக்கான மாநிலங்களின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான உதவி (ASIDE/TIES)திட்டத்தின் மூலமாக ரூ. 17.63 கோடியில் சுத்திகரிப்பு நிலையம் (ZLD) மூலம் மேம்படுத்தப்பட்டது.
தற்போது இந்திய காலனி மற்றும் துணைக் கருவிகள் அபிவிருத்தி திட்டத்தின் (IFLADP) திட்டத்தின்கீழ் (ZLD) அமைப்பை மேம்படுத்தும் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தில் குறிப்பாக சூரிய ஒளி (solar power) மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து பயன்படுத்தவும், தூய்மையான ஆக்சிஜன் உற்பத்தி (VSA), சூரிய ஒளி மூலம் நீராவி (solar steam)), திடக்கழிவுமேலாண்மை (Sludge Drying) செய்ய பல்வேறு திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் புதுப்புது தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகிறது. மேலும் எதிர்மறை சவ்வூடு பரவல் முறையில் பெறப்பட்ட நன்னீரும், ஆவியாக்கி பெறப்பட்ட நன்னீரும் 95 சதவீதத்துக்கு தோல் தொழிற்சாலைகளுக்கு மீண்டும் அனுப்பப்படுகிறது. இதன் மூலம் இப்பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுத்து, நிலத்தடி நீர் உபயோகத்தைக் குறைத்து சாதனை படைத்து வருகிறது. 
திடக்கழிவுகளை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதலின்படி கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு வேஸ்ட் மேனேஜ்மென்ட் லிமிடெட் கிடங்குக்கும், அருணாசலா சிமெண்ட் ஆலைக்கும் அனுப்பப்படுகிறது.
இந்நிறுவனத்தில் உயிரி முறையில் எரிபொருள் பிரித்தெடுக்கும் புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டு, பயோ மீத்தேன் மற்றும் ஹைட்ரஜன் ஆகியவை பிரித்தெடுப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. 
இந்த பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மிக சிறப்பான முறையில் செயல்படுவதற்கு மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம், தேசிய சுற்றுச்சூழல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம், ஐக்கிய கூட்டமைப்பு தொழில் வளர்ச்சிக் கழகம், இந்திய தோல் தொழில் அமைப்பு, தென் இந்திய தோல் பதனிடுவோர் மற்றும் வியாபாரிகள் சங்கம், மத்திய தோல் ஏற்றுமதிக் கழகம், தோல் தொழிற்சாலைகளுக்கான சென்னை சுற்றுச்சூழல் மேலாண்மை நிறுவனம் உள்ளிட்ட அமைப்புகள் பக்க பலமாக இருக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com