சந்தைக்கு வருகிறது கிரசென்ட் கல்வி நிறுவன தயாரிப்புகள்

சென்னையை அடுத்த வண்டலூரில் அமைந்துள்ள கிரசென்ட் உயர்தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் உயிரி அறிவியல் துறையைச் சார்ந்த பேராசிரியர்களும், மாணவர்களும் வியக்கத்தக்க
சந்தைக்கு வருகிறது கிரசென்ட் கல்வி நிறுவன தயாரிப்புகள்

சென்னையை அடுத்த வண்டலூரில் அமைந்துள்ள கிரசென்ட் உயர்தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் உயிரி அறிவியல் துறையைச் சார்ந்த பேராசிரியர்களும், மாணவர்களும் வியக்கத்தக்க வகையில் ஓசைபடாமல் சாதனை படைத்துள்ளனர்.
 அப்படி என்ன சாதனை?: உயிரி அறிவியல் பாடம் போதிக்கும் பேராசிரியர்கள், உயிரி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி என்னென்ன பொருள்கள் தயாரிக்கலாம் என்று பாடம் நடத்துவதுடன், குறைந்த முதலீட்டில் தரமான 25-க்கும் மேற்பட்ட அன்றாட வீட்டு உபயோகப் பொருள்களைத் தயாரித்து இருக்கிறார்கள்.
 அனைத்து தயாரிப்புகளுக்கும் காப்புரிமை பெறுவதற்காகவும் விண்ணப்பித்துள்ளனர். வெகு விரைவில் கிரசென்ட் கல்வி நிறுவன மாணவர்களின் தயாரிப்புகள் சந்தைக்கு விற்பனைக்கு வர இருப்பதாக பேராசிரியர் ஹேமலதா தெரிவித்தார்.
 பொதுவாக கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு அடிப்படை அறிவாற்றலை பாடத் திட்டம் மூலம் போதிப்பதுடன் தங்கள் பணி நிறைவடைந்து விட்டது. இனி மாணவர்கள் அவர்களாகவே தங்களது அறிவாற்றல், தொழில்நுட்பத்திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கருதும் நிலையில், கிரசென்ட் கல்வி நிறுவனத்தினர் மாணவர்களைத் தொழில் முனைவோராக மேம்படுத்தும் பணியை சிறப்பாக செய்து வருகின்றனர்.
 உயிரி அறிவியல் துறை சார்ந்த பேராசிரியர்களுடன் மாணவர்கள் மருத்துவக் குணம் நிறைந்த தாத்தா- பாட்டி மூலிகை சோப், கை கழுவும் கிருமி நாசினி, கொசு விரட்டி, தரையை சுத்தம் செய்யும் மூலிகை கிருமி நாசினி, புரதச் சத்துமிக்க தேயிலைத் தூள், நீரழிவு நோயாளிகளுக்கான காய மருந்து கிரீம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட பொருள்களைத் தயாரித்துள்ளனர்.
 உயிரி அறிவியல் துறை சார்பில் தயாரிக்கப்பட்ட இந்த பொருள்களின் அறிமுக விழா அண்மையில் நடைபெற்றது. அவற்றை கிரசென்ட் உயர்தொழில்நுட்பக் கல்வி நிறுவனத் துணைவேந்தர் சாகுல் ஹமீது பின் அபுபக்கர் வெளியிட, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பச் செயலர் ஆர்.சீனிவாசன் பெற்றுக் கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com