பன்முகத் திறனை பாரறியச் செய்யும் பட்டுக்கோட்டை லாரல் மேல்நிலைப் பள்ளி

மாணவ, மாணவிகளின் பன்முகத் திறனை பாரறியச் செய்யும் பணியை செய்து வருகிறது பட்டுக்கோட்டை லாரல் மேல்நிலைப் பள்ளி.
பன்முகத் திறனை பாரறியச் செய்யும் பட்டுக்கோட்டை லாரல் மேல்நிலைப் பள்ளி

மாணவ, மாணவிகளின் பன்முகத் திறனை பாரறியச் செய்யும் பணியை செய்து வருகிறது பட்டுக்கோட்டை லாரல் மேல்நிலைப் பள்ளி.
"கல்விக்கு அழகு கசடற மொழிதல்' என்ற பொன்மொழிக்கேற்ப இப்பள்ளியைத் தேர்வு செய்து வரும் மாணவர்களுக்கு, அவர்களின் ஐயம் தீர கற்பிக்கும் அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்தி, கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவுகளையும் பல ஆண்டுகளாக நிறைவேற்றி வரும் பெருமையை இப்பள்ளிபெற்றுள்ளது.
இதுகுறித்து பள்ளியின் தாளாளர் வி. பாலசுப்பிரமணியன் கூறியது:
ஒவ்வொரு குழந்தையையும் தங்கள் குழந்தையாகக் கருதி அவர்களுக்காக தங்கள் கல்விப் பணியை முழுமையாக அர்ப்பணிக்கும் பள்ளி நிர்வாகம், மாணவர்களின் நலனே தங்கள் நலன் எனக் கருதும் ஆசிரியர்களின் அயராத உழைப்பால், 2019, பிளஸ் 2 பொதுத் தேர்வில் இப்பள்ளி மாணவி ஆர். வைஷ்ணவி 600-க்கு 587 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றார். எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் இ. ரிஷிவந்தினி என்ற மாணவி 500-க்கு 493 மதிப்பெண்களுடன் மாநிலத்தில் சிறப்பிடம் பெற்று பள்ளியின் பாரம்பரியத்தைப் பறைசாற்றினர்.
பன்முகத்திறனை பாரறியச் செய்தல்: ஏட்டில் மாணவ, மாணவிகளின் தனித்திறன்களைக் கண்டறிந்து (பேச்சு - பாட்டு - ஓவியம் - கட்டுரை), அதற்கெனத் தனித்தனி ஆசிரியர்களின் மூலம் பயிற்சியளித்து மாவட்ட, மாநில அளவில் நடைபெறும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்க செய்து வெற்றிப் பெற வைப்பதோடு, அவர்களின் எதிர்கால வாழ்வை ஒளிமயமாக்கும் உன்னதப் பணியையும் லாரல் பள்ளி மேற்கொண்டு வருகிறது.
இன்றைய கல்விச்சூழலில் மாணவர்களுக்கு பிறமொழி ஆளுமை தேவை என்பதை அறிந்து, சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு ஹிந்தி மொழி பயிற்றுவிக்கப்பட்டு தக்ஷிண பாரத ஹிந்தி பிரசார சபாவால் நடத்தப்பட்டு வரும் பிராத்மிக், மத்யமா, ராஷ்ட்ரபாஷா போன்ற தேர்வுகளில் வெற்றி பெறச் செய்து, அதற்கான சான்றிதழும் பெற்று வழங்கப்படுகிறது. அதற்கான தேர்வு மையமாகவும் இப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
மாணவர்கள் N​I​SE, KV​PY, OL​Y​M​P​I​AD, CO​M​M​E​R​CE WI​Z​A​RD போன்ற போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறும் வகையில் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சியளிக்கப்படுகிறது.
உடற்கல்வியில் உன்னதம்: தனியார் பள்ளிகளிலேயே மிகப்பெரிய விளையாட்டு மைதானத்தை தன்னகத்தே கொண்ட இப்பள்ளி, மாணவர்கள் உடம்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும், அவர்கள் எந்த விளையாட்டில் ஆர்வமுடையவர்களாக விளங்குகிறார்களோ அவ்விளையாட்டில் நல்ல அனுபவமிக்க உடற்கல்வி ஆசிரியர்கள் மூலம் பயிற்சியளித்து குறுவட்ட, வட்டம் மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் முதலிடம் பெறச்செய்து, அவர்களை சாதனையாளர்களாக ஆக்குவதிலும் சரித்திரம் படைத்து வருகிறது. 
மருத்துவராக்குவதில் மகத்துவம்: மாறிவரும் கல்விச்சூழலைக் கருத்தில் கொண்டு, மாணவர்கள் N​E​ET, JEE, IIT தேர்வுகளை எதிர்கொள்ள ஆந்திரம், கேரளம் போன்ற மாநிலங்களிலிருந்து அனுபவமிக்க ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சியளிக்கப்பட்டு வருவதால், மாறிவரும் கல்விச்சூழலிலும், மாணவர்களை மருத்துவராக்குவதில் மகுடம் பதிக்கும் பள்ளியாகத் திகழ்கிறது.
பொறியியல் படிப்பில் 100-க்கும் அதிகமான மாணவர்கள் முதல் 10 தரமுள்ள (T‌o‌p-10) பொறியியல் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். இதைப்போலவே 7 மாணவர்கள் கால்நடை மருத்துவம் (பி.வி.எஸ்ஸி) படிப்பில் சேர்ந்துள்ளார்கள். மேலும், வேளாண் துறை சார்ந்த கல்விகளுக்கான தர வரிசைப் பட்டியலிலும் முதலிடம் பெறச்செய்து பல துறைகளிலும் பரிணமிக்கும் பள்ளியாகத் திகழ்கிறது. இவ்வாறு போதிப்பதோடு, சாதிக்கவும் செய்யும் சாதனைப்பள்ளி என்ற பெயரை லாரல் மேல்நிலைப் பள்ளி நிலைநாட்டி வருகிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com