மக்களைக் கவரும் காயல்பட்டினம் அல்வா, தம்மடை

காயல்பட்டினத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்பவர்கள் தங்கள் கையில் கொண்டு செல்லும் உணவுப் பண்டங்களில் அல்வா, தம்மடைக்கு முக்கிய இடம் உண்டு.
மக்களைக் கவரும் காயல்பட்டினம் அல்வா, தம்மடை

காயல்பட்டினத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்பவர்கள் தங்கள் கையில் கொண்டு செல்லும் உணவுப் பண்டங்களில் அல்வா, தம்மடைக்கு முக்கிய இடம் உண்டு.
 அல்வாவிற்கு பெயர் போனது திருநெல்வேலிதான் என்றாலும் கூட, காயல்பட்டினத்தில் தயாரிக்கப்படும் அல்வாவிற்கும் தனிச் சிறப்பு உண்டு.
 இங்குள்ள அல்வா பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு என மூன்று வண்ணங்களும் சேர்ந்த நிலையில் பார்ப்பதற்கு மிகவும் அழகான தோற்றத்துடன் இருப்பதாலும், கூடுதல் சுவையாலும் இப்பகுதிக்கு பெருமை சேர்த்துள்ளது.
 இங்கு பாரம்பரிய உணவுப் பொருளாக உள்ள அல்வா, பல வீடுகளிலும் குடிசைத் தொழிலாக செய்யப்படுகிறது. விசேஷ வீடுகளில் அல்வா முக்கிய இடம் வகிக்கும். மணமக்களுக்கு வழங்கும் சீர்வரிசையிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. நகருக்கு வரும் முக்கியப் பிரமுகர்களுக்கு அல்வாவும், தம்மடையும் வழங்குவதை இப்பகுதி மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இங்கு தயாரிக்கப்படும் அல்வா கிலோ ரூ. 400 முதல் ரூ. 700 வரை விற்பனை செய்யப்படுகிறது.
 தம்மடை பணியாரம் போன்று மெதுவாக இருக்கும். ரவை, சீனி மற்றும் தேங்காய்ப்பால் கொண்டு தயார் செய்யப்படுகிறது. கலவையை அதற்கான அச்சில் ஊற்றி அதை ஓவன் அடுப்பில் குறிப்பிட்ட வெப்பம் வரும் வரை வைத்திருந்து எடுத்து விற்பனை செய்யப்படுகிறது. இதில் வண்ணம் சேர்ப்பதோடு, முந்திரிபருப்பு, பாதாம், பிஸ்தா போன்றவை சேர்த்தும் விற்பது உண்டு. இது கிலோ ரூ. 200 முதல் ரூ.360 வரை விற்கப்படுகிறது.
 - கே.வசந்தகுமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com