கை கொடுக்கும் கான்கிரீட் தொழில்

திருநெல்வேலி மாவட்டத்தில் கீழப்பாவூர் சுற்று வட்டாரப் பகுதியை பொறுத்தளவில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை விவசாயத்தை மட்டுமே பிரதான தொழிலாக செய்து வந்தனர்.
கை கொடுக்கும் கான்கிரீட் தொழில்

திருநெல்வேலி மாவட்டத்தில் கீழப்பாவூர் சுற்று வட்டாரப் பகுதியை பொறுத்தளவில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை விவசாயத்தை மட்டுமே பிரதான தொழிலாக செய்து வந்தனர்.
 காலப்போக்கில் பீடி சுற்றும் தொழில் மீது பெண்களுக்கு ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக விவசாயத்தில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது. அதோடு பருவமழை அடிக்கடி பொய்த்துப் போவது, போதிய லாபம் இல்லாதது போன்ற காரணங்களால் மாற்றுத் தொழிலை நோக்கி விவசாயிகள் செல்லத் தொடங்கினர்.
 இது போன்ற சூழலில் தான் பாவூர்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்தவர்கள் கான்கிரீட் தொழிலில் ஈடுபட ஆரம்பித்தனர். தற்போது நாளொன்றுக்கு சராசரியாக 400 முதல் 700 பேர் வரை இத்தொழில் மூலம் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.
 தினந்தோறும் குறைந்தது ரூ.400 முதல் 600 வரை கூலியாக கிடைப்பதால், இத்தொழில் மீதான ஆர்வம் இப்பகுதியினருக்கு அதிகரித்து வருகிறது.
 சுமார் 100-க்கும் மேற்பட்ட கலவை இயந்திரங்கள், 700- க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் வீடுகள், கடைகள், பெரிய மால்களில் கான்கிரீட் போடுதல், கான்கிரீட் சாலைகள் அமைத்தல் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.
 இவர்கள், திருநெல்வேலி மாவட்டம் மட்டுமன்றி தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை மற்றும் கேரளத்தின் சில பகுதிகளுக்கும் சென்று வேலை செய்து வருகின்றனர்.
 இத்தொழிலில் ஈடுபடுவோருக்கு பாதுகாப்பு குறித்த எவ்வித உத்தரவாதமும் இல்லாத நிலையிலும், ஒரு தொழிலாளி விபத்தில் இறந்தால் அரசு சார்பில் எவ்வித இழப்பீடும் கிடைக்காத நிலையிலும் அவர்கள் தொடர்ந்து வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.
 இத்தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு கடனுதவி வழங்குவதில் முன்னுரிமை, விபத்துக்கான இழப்பீடு உள்ளிட்டவற்றை அரசு செய்தால் அத் தொழிலாளர்களுக்கும் வாழ்க்கை பிரகாசமாக அமையும்.
 -எஸ்.கணேஷ்குமார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com