வருவாய் அளிக்கும் ஆட்டுத் தோல்!

ஆட்டிறைச்சி அதிகம் பயன்படுத்தப்படும் இந்தியாவில் அவற்றின் தோல் மூலம் நடைபெறும் வணிகமும் அதிகமாகவே உள்ளது. உலகளவில் மாடு, ஆடு தோல் ஏற்றுமதியில் இந்தியா முன்னணி நாடுகள் வரிசையில் உள்ளது.
வருவாய் அளிக்கும் ஆட்டுத் தோல்!

ஆட்டிறைச்சி அதிகம் பயன்படுத்தப்படும் இந்தியாவில் அவற்றின் தோல் மூலம் நடைபெறும் வணிகமும் அதிகமாகவே உள்ளது. உலகளவில் மாடு, ஆடு தோல் ஏற்றுமதியில் இந்தியா முன்னணி நாடுகள் வரிசையில் உள்ளது.
 திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை சீவலப்பேரி சாலையில் ஆட்டுத்தோல் சந்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. 10-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இங்கு ஆட்டுத்தோலை வாங்கவும், விற்கவும் செய்து வருகின்றனர்.
 இதுகுறித்து வியாபாரிகள் கூறியது: திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சேகரிக்கப்படும் ஆட்டுத்தோல்கள் இந்த சந்தைக்குக் கொண்டு வரப்படுகின்றன. ஒரு ஆட்டின் தோல் ரூ.200 முதல் ரூ.500 வரை தரத்திற்கு ஏற்ப விற்பனையாகும்.
 ஆட்டுத்தோல்கள் இங்கிருந்து வேலூர் மாவட்டத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அங்கு பதப்படுத்தப்பட்டு காலணிகள், பெண்களின் கைப்பைகள், கையுறைகள் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு தோல் பொருள் தயாரிப்புக்கு தமிழகத்தில் இருந்து ஆட்டுத்தோல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
 வாரந்தோறும் வியாழக்கிழமை இந்தச் சந்தை நடைபெறுகிறது. தென்தமிழகத்தில் கோயில் விழாக்களில் ஏராளமான ஆடுகள் வெட்டப்படுகின்றன. இதுதவிர ரமலான், பக்ரீத், தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் ஆட்டிறைச்சி விற்பனை அதிகளவில் இருக்கும். இந்தக் காலங்களில் ஆட்டுத் தோல்களை சிலர் மண்ணில் புதைப்பதும், வீணடிப்பதும் உண்டு.
 பெரும்பாலான ஆட்டிறைச்சி விற்பனைக் கூடங்களில் தோல்களை நேரடியாகவே விற்கின்றனர். பலர் அதை மண்ணிலே புதைத்து விடுகின்றனர். ஆட்டுத்தோல்களை முறையாக பதப்படுத்தாமல் புதைப்பதால் நன்மை கிடையாது. சுகாதாரக் கேடுதான் உருவாகும். பணம் தரும் ஆட்டுத்தோல்களை வீணடிக்காமல், சந்தையிலோ, நேரடியாகவோ விற்பனை செய்வதன் மூலம் அதிக வருவாய் ஈட்ட வாய்ப்புள்ளது என்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com