ஆன்மிகம்
திருவாசகம்-சொற்பொழிவு: பாலநாவாயன் பங்கேற்பு, தேவாசிரியன் திருமுறை மண்டபம், மருந்தீசுவரர் கோயில், திருவான்மியூர், இரவு 7.
ஸ்ரீமந் நாராயணீயம்-உபன்யாசம்: ஜமதக்னீ ஜீ பங்கேற்பு, ஸ்ரீ பொங்கி மடாலயம், பொங்கி மடம் தெரு, மாடல் பள்ளி அருகில், நங்கநல்லூர், மாலை 6.30.
சீதா கல்யாணம்-சொற்பொழிவு: பொழிச்சலூர் எஸ். ஜெயராமன், ஸ்ரீ பாலசுப்பிரமணிய சத் சங்கம், குமரன் குன்றம், மாலை 6.30.
பொது
"இன்ஸ்பயர் 2011'-அறிவியல் முகாம்: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தலைமை கட்டுப்பாட்டாளரும் விஞ்ஞானியுமான ஏ. சிவதானு பிள்ளை, சத்தியபாமா பல்கலைக்கழக வேந்தர் ஜேப்பியார் பங்கேற்பு, சத்தியபாமா பல்கலைக்கழகம், ஜேப்பியார் நகர், காலை 9.30.
திருக்குறளும் ஏலாதியும்-சொற்பொழிவு: மலையமான், சரளா ராஜகோபாலன் பங்கேற்பு, அழகப்பா பள்ளி, புரசைவாக்கம், மாலை 6.
திடக் கழிவு மேலாண்மை-கருத்தரங்கம்: எக்ஸ்னோரா கிரீன் மங்களம் பாலசுப்பிரமணியன் பங்கேற்பு, ஸ்ரீ சாய் ராம் பொறியியல் கல்லூரி, மதியம் 2.
"தமிழ் ஒளியின் சிறந்த கவிதைகள்'-நூல் குறித்த கருத்தரங்கம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், மாலை 6.