Enable Javscript for better performance
மதுரை- Dinamani

சுடச்சுட

    

    மதுரை

    பொது

    ஹிந்த் மஸ்தூர் சபா (எச்எம்எஸ் ரயில்வே தொழிலாளர் சங்கம்): 33 ஆவது தேசிய எழுச்சி மாநாடு, பங்கேற்பு- மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா,தெலுங்கானா மாநில உள்துறை அமைச்சர் நாயினி நரசிம்மா ரெட்டி மற்றும் பல்வேறு ரயில்வே தொழிலாளர் சங்கங்களின் தேசிய அளவிலான நிர்வாகிகள், ரயில்வே மைதானம்,அரசரடி, பிற்பகல் 2.

    மடீட்சியா: இளம் தலைமுறை தொழில்முனைவோருக்கு தொழில் தொடங்குவது குறித்த விழிப்புணர்வு கூட்டம், தமிழ்நாடு தொழில்முதலீட்டுக்கழகம் (டிக்) மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சேவைகள் மற்றும் கடன் உதவித்திட்டங்கள் குறித்த அதிகாரிகள் விளக்கவுரை, தலைமை-மடீட்சியா தலைவர் வி.எஸ்.மணிமாறன், மடீட்சியா அரங்கம், மாலை 5.

    செந்தமிழ்க் கல்லூரி: ஆண்டு விழா, விளையாட்டு விழா, நாட்டுநலப்பணித்திட்ட நிறைவு விழா ஆகிய முப்பெரும் விழா, தலைமை- மதுரைத்தமிழ்ச்சங்கத் தலைவர் ந.குமரன் சேதுபதி, சிறப்புரை-தமிழறிஞர் இரா.இளங்குமரனார், காலை 10.30

    கேந்திரிய வித்யாலயா: 48ஆவது ஆண்டு விழா, விருதுகள் வழங்கல் மற்றும் கலை நிகழ்ச்சிகள், பங்கேற்பு-மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன், வித்யாலயா நிர்வாகக்குழு தகவல் அலுவலர் ஏ.எம்.மைக்கேல்ராஜ்,பள்ளி வளாகம்,நரிமேடு,மாலை 5.

    காந்தி நினைவு அருங்காட்சியகம்: பல்சமய நட்புறவு ஒற்றுமை மையம்: பள்ளி மாணவ, மாணவியருக்கான வீட்டு உபயோக வேதிப்பொருள்கள் தயாரிப்பு பயிற்சி, ஏற்பாடு-காந்தியக்கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம், அருங்காட்சியக வளாகம், காலை 10.15. சர்வ சமயப்பிரார்த்தனை, தலைமை- அருங்காட்சியகத்தலைவர்  டி.ஆர்.தினகரன், உரையாற்றுபவர்- அருங்காட்சியகச் செயலர் மா.பா.குருசாமி, அமைதிப்பூங்கா, மாலை 4.30.

    சௌராஷ்டிர தொழில் வர்த்தக சங்கம்: சிறப்புரை, தலைப்பு- வாட் வரிவிகித மாற்றங்கள், பேசுபவர்- வாட் ஆலோசகர் கே.ஸ்ரீநிவாசன், சங்க அரங்கம், 136, கீழவெளிவீதி, மாலை 6.30

    காந்தியக்கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம்:பள்ளி மாணவர்களுக்கான வீட்டு உபயோக வேதிப்பொருள்கள் தயாரிப்பு பயிற்சி, அருங்காட்சியகம், காலை 10.15,

    பூம்புகார் விற்பனை நிலையம்: அக்ஷய திருதியை கண்காட்சி, ரயில்நிலையம் எதிரில், மேலவெளிவீதி, காலை 10 முதல் இரவு 8 வரை.

    ஆன்மிகம்

    திருவள்ளுவர் மன்றம்: சொற்பொழிவு, பொருள்- அவ்வைக்குறள்,நிகழ்த்துபவர்- அ.கி.செ.திருமாவளவன், சக்திவேலம்மாள்நகர், எஸ்எஸ்.காலனி, மாலை 5.

    ஸ்ரீநவநீத கிருஷ்ணன் திருக்கோயில்: உடையவர் உற்சவம், 3 ஆவது நாள் உள்புறப்பாடு, சேவாகாலம் கோஷ்டி, ராமாயணச்சாவடித்தெரு,வடக்குமாசிவீதி, இரவு 7

    ஸத்குரு ஸங்கீத ஸமாஜம்-ருக்மணி விட்டல் சமஸ்தான்-தமிழ்நாடு பிராமணர் சங்கம்: நாமஸாகர், கலியுகத்தில் இறைவனை அடைய நாம சங்கீர்த்தனம், நடத்துபவர்- ஸ்ரீஸ்ரீவிட்டல்தாஸ் மஹராஜ், லட்சுமி சுந்தரம் அரங்கம், தல்லாகுளம்,இரவு 7முதல் இரவு 9 வரை.

    செல்வவிநாயகர் ஆலய திருவருள் சபை: சொற்பொழிவு, பொருள்-திருக்குறளைத் திறப்போம்,நிகழ்த்துபவர்- சண்முகத்திருக்குமரன், ரயில்வே காலனி, இரவு 7.30

    மதுரைதிருவள்ளுவர் கழகம்: சொற்பொழிவு, பொருள்- திருக்குறள்,நிகழ்த்துபவர்-ந.மாணிக்கம், வடக்கு ஆடிவீதி, இரவு 7.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai