• Tag results for அஞ்சலி

மஹா குருசாமி நம்பியாரின் நூற்றாண்டு அஞ்சலி

பழம்பெரும் நடிகரும் சபரிமலை ஐய்யப்பன் பக்தருமான மஹா குருசாமி எம். என். நம்பியாரின் நூற்றாண்டு வருடம் சமீபத்தில் நடைபெற்றது. அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி அவரது நினைவு தினமான நவம்பர் 19வது அன்று சென்னை மியூசிக் அகாடமி அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இளையராஜா தலைமை விருந்தினராகவும் ஒய்வு பெற்ற காவல்துறை தலைமை இயக்குனர் கே. விஜயகுமார் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டு மஹா குருசாமி நம்பியாருடன் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

published on : 20th November 2019

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள்: வண்ணங்களால் அஞ்சலி செலுத்திய புர்ஜ் கலீஃபா! 

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள்: வண்ணங்களால் அஞ்சலி செலுத்திய புர்ஜ் கலீஃபா! - படங்கள் உதவி: டுவிட்டர்

published on : 3rd October 2019

அருண் ஜேட்லி இறுதி அஞ்சலி புகைப்படங்கள்

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார். அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், மாநில தலைவர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

published on : 25th August 2019

‘பாஜக’வின் சுடர்மிகு பெண் முகம் சுஷ்மா சுவராஜ் மறைவு! (புகைப்பட அஞ்சலி)

பாஜகவின் பொலிவு மிக்க முகங்களில் ஒருவரான மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் நேற்று இரவு தில்லியில் காலமானார். அவருக்கு வயது 67. தமது 25 வயதில் மந்திரி சபையில் இடம் பெற்றவர் எனும் பெருமைக்குரிய சுஷ்மா, 7 முறை பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய சிறப்புக்குரியவர் என்பதோடு அதில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். 

published on : 7th August 2019

லிசா

பிஜி முத்தையா தயாரிப்பில் ராஜூ விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அஞ்சலி, யோகிபாபு, மைம் கோபி, சாம் ஜோன்ஸ் உள்பட பலர் நடித்து உள்ள படம் 'லிசா'. சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கும் இந்த படம்,  3டி தொழில்நுட்பம் கொண்டு உருவாகியுள்ளது.

published on : 29th June 2019

சிந்துபாத்

இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அஞ்சலி நடித்துள்ள படம் 'சிந்துபாத்'. இதில் விஜய்சேதுபதியின் மகன் சூர்யா அறிமுகமாகிறார். படத்தை கே புரொடக்ஷன் மற்றும் வாசன் மூவீஸ் இணைந்து தயாரித்துள்ளது.

published on : 25th June 2019

கிரேஸி மோகன் உடல் தகனம்

மோகன் ரங்காச்சாரி என்ற இயற்பெயர் கொண்ட பிரபல நகைச்சுவை நாடக நடிகரும், புகழ்பெற்ற வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக கிரேஸி மோகனின் உடல் மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

published on : 11th June 2019

கிரேஸி மோகன்: 1952-2019

பிரபல நகைச்சுவை நாடக நடிகரும், புகழ்பெற்ற வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் மாரடைப்பால் காலமானார். இதனையடுத்து திரைத்துறையினர் பலரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். கவுண்டமணி, எஸ்.பி. பாலசுப்ரமணியம், கமல், இசையமைப்பாளர் தேவா, நடிகர்கள் சிவகார்த்திகேயேன், சிவகுமார், பாண்டியராஜன், பிரசன்னா, பிரசாந்த், சதீஷ், சிவகுமார், விவேக், இயக்குனர்கள் கேஎஸ் ரவிக்குமார், வசந்த், அரசியல் தலைவர் ஜி கே வாசன் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

published on : 11th June 2019

கருணாநிதி நினைவிடத்தில்  ஸ்டாலின் மரியாதை

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக அணி அபார வெற்றி பெற்றது தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய எம்.பி.க்கள் பேரணியாகச் மெரீனா கடற்கரையில், உள்ள அண்ணா, கருணாநிதியின் நினைவிடங்களில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து, கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரான் தோட்டத்தில் உள்ள இல்லத்தில் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர். 

published on : 26th May 2019

ராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28-வது நினைவு தினத்தை முன்னிட்டு, தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ராஜீவ் காந்தியின் மனைவியுமான சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலர் பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள்மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

published on : 22nd May 2019

சிந்துபாத்

அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் 'சிந்துபாத்'. இப்படத்தை கே புரொடக்‌ஷன்ஸ் மற்றும் வன்சன் மூவிஸ் இணைந்து தயாரிக்கிறது. விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

published on : 6th April 2019

நெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி

திருவாரூர் மாவட்டம் ஆதிரெங்கம் கிராமத்தைச் சேர்ந்த உழவரும், இயற்கை வேளாண் விஞ்ஞானி நெல் ஜெயராமன், உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். மறைந்த விவசாயி `நெல்' ஜெயராமனின் உடலுக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின், டி.டி.வி. தினகரன், ஜி.கே.வாசன், தமிழிசை, முத்தரசன், பி.ஆர்.பாண்டியன், அமைச்சர் காமராஜ், நடிகர் கார்த்தி, டிஜிபி டி.கே.ராஜேந்திரன், திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலிசெலுத்தினர்.

published on : 7th December 2018

வாஜ்பாய் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி

பா.ஜ.க-வின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் வயது மூப்பின் காரணமாகவும், சிறுநீர்த்தொற்று நோய் ஏற்பட்டதாலும் தில்லியில் உள்ள எம்ய்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.  அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கலை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதை தொடர்ந்து அவரது உடலிலுக்கு தேசியக்கொடி போர்த்தப்பட்டு அஞ்சலிக்காக கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டுள்ளது. முதலில் குடும்ப உறுப்பினர்கள் முதலில் அஞ்சலி செலுத்திய பிறகு பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வேங்கையா நாயுடு, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். படங்கள் உதவி: ஏஎன்ஐ

published on : 16th August 2018

கருணாநிதி நினைவிடத்தில் அழகிரி அஞ்சலி

திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி நினைவிடத்தில்  அவரது மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க அழகிரி, மனைவி காந்தி அழகிரி, மகன் தயாநிதி அழகிரி, மகள் மு.க.தமிழரசு ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

published on : 14th August 2018
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை