• Tag results for அமெரிக்கா

ருத்ர தாண்டவம் ஆடிய ஐடா புயல் - புகைப்படங்கள்

பருவநிலை மாற்றம் காரணமாக அமெரிக்காவில் அடிக்கடி சக்தி வாய்ந்த புயல்கள் தாக்கி வந்த நிலையில் மெக்சிகோ வளைகுடாவில் உருவான ‘ஐடா' புயல் அமெரிக்காவை புரட்டி போட்டுள்ளது.

published on : 3rd September 2021

அமெரிக்காவில் வெடித்த மக்கள் போராட்டம் - புகைப்படங்கள்

அமெரிக்காவின் மின்னபொலிஸ் பகுதியில் கருப்பின இளைஞர் ஜார்ஜ் ஃபிளாயிட் என்பவர் போலீஸாரால் கொல்லப்பட்டதைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. பல்வேறு இடங்களில் வன்முறை ஏற்பட்டதால் வணிக வளாகங்கள், வாகனங்கள் போன்றவை தீக்கிரையாகின.

published on : 6th June 2020

டெக்சாஸ் வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு

அமெரிக்காவின் டெக்சாஸில் வணிக வளாகத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூடு தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர், 40க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.  இந்த தாக்குதல் தொடர்பாக நபரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். துப்பாக்கிச் சூடு குறித்து அதிபர் டிரம்ப், தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். 

published on : 4th August 2019

டொனால்ட் டிரம்ப் - கிம் ஜாங் உன் சந்திப்பு

உலகமே ஆவலோடு உற்று நோக்கி காத்திருந்த, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் - வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு நடைபெற்றது. இந்திய நேரப்படி காலை 6.30 மணியளவில் பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தையை முன்னிட்டு, சிங்கப்பூர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த சந்திப்பு உலக அரங்கில், அனைத்து மட்டத்திலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

published on : 12th June 2018

துப்பாக்கி வன்முறைக்கு எதிராக பேரணி

பார்க்லேண்ட் பள்ளியில் நடைபெற்ற மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் 17 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள பென்சிவேனியா அவென்யுவில் மாணவர்கள் உள்பட ஏராளமானோர் தன்னெழுச்சி போராட்டமாக திரண்டு, துப்பாக்கி வன்முறை கலாசாரத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேரணியாக சென்று கோஷங்கள் எழுப்பினர்.

published on : 25th March 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை